என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னி பூஜை"

    • கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
    • கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவுகாற்றுடன் கன மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

    காற்றுடன் கூடிய கன மழைபெய்ததால் பண்ருட்டி அடுத்த நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்வளாகத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான வேப்பமரம் ஒன்றுவேரோடு சாய்ந்து விழுந்தது இதனால் நேற்று இரவு அங்கு நடந்த ஐயப்பபக்தர்கள் கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது 

    • உளமார்ந்த பக்தியைத்தான் அய்யப்பன் விரும்புவார். கன்னி பூஜை நடத்துவது கட்டாயம் இல்லை.
    • வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கி செய்வதை அய்யப்பன் விரும்ப மாட்டார்.

    கன்னி பூஜை என்பது முதல் வருடம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்

    தனது விரத காலத்தில் குருசாமிக்கு சவுகரியமான ஒரு நாளில் தனது வீட்டில் நடத்தும் பூஜையும்

    அதைத் தொடர்ந்து அய்யப்பன்மார்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கும் விருந்தும் ஆகும்.

    இந்தப் பூஜையை கன்னி அய்யப்பனின் வசதி வாய்ப்புக்குத் தகுந்தாற்போல் (இடவசதி, பண வசதிக்கு)

    ஏற்றாற்போல் செய்தால் போதும். வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கி செய்வதை அய்யப்பன் விரும்ப மாட்டார்.

    உளமார்ந்த பக்தியைத்தான் அய்யப்பன் விரும்புவார்.

    கன்னி பூஜை நடத்துவது கட்டாயம் இல்லை.

    பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் தனது பக்தன் உண்மையான பக்தியுடன் ஒரு இலை (துளசி),

    ஒரு பழம், ஒரு பூ இதை தனக்குப் படைத்தால் கூட, தான் பூரண மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

    ×