என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறமைகள்"

    • வல்லத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • வாலிபர்கள் நூலகங்களை பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள அறிவுறுத்தினார்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சி அலுவல–கத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக வல்லம் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டார். பின்னர புயல் மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்களை பார்வையிட்டார்.

    இதனையடுத்து பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண–சுந்தரம், செயல்‌ அலுவலர் பிரகந்தநாயகி மற்றும் வல்லம் பேரூராட்சியை சேர்ந்த 15 வார்டு கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது வார்டு கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையானவைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

    ஆங்கிலேயர்கள் காலத்தில் வல்லத்தில் தான் கலெக்டர் பங்களா இருந்து வந்துள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாகும். வல்லத்தில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முடிவடைந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

    வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளின்படி சில வார்டுகளில் புதிய ரேஷன் கடை, சுடுகாடு வசதி ஏற்பாடு செய்து தரப்படும். வல்லத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய தார்சாலை அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து வல்லம் அய்யனார் கோவில் பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள செல்லும் போது அங்கு வாலிபர்கள் சிலர் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தனர்.

    கலெக்டர் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் விளையாடுவதை நிறுத்தினர்.

    இதனை பார்த்த கலெக்டர் வாலிபர்–களிடம் விளையாட்டை தொடருமாறு புன்னகைத்து விட்டு சென்றார்.

    வாலிபர்கள் நூலகங்களை பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள அறிவுறுத்தினார்.

    பின்னர் வளம் மீட்பு பூங்கா, திருவள்ளூவர் பூங்காக்களை பார்வையிட்டார்.

    இதில் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற்–பொறியாளர் மாதவன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×