search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்லை"

    • மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குலசேகரத்தில் உள்ள நாகக்கோடு சந்திப்பில் இருந்து திருவரம்பு வரை உள்ள சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை பணிகள் தொடங்கின.

    இதற்காக திருவரம்பு பகுதியில் சாலையை அகலப்படுத்த சுமார் 2½ அடி ஆழத்தில் ரோட்டோரம் மண் அப்புறப்படுத்தப்பட்டது. மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    ஆனால் அதனை செய்யாமல் ஜல்லிக்கு பதிலாக குறைந்த கழிவுகள் நிறைந்த பாறைப்பொடிகள் கொண்டு வந்து சாலையில் குவித்துள்ளனர்.

    இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும், இளைஞர்களும் ஆத்திரமடைந்து மோசமான பாறைப்பொடியை இங்கே ஏன் கொட்டுகிறீர்கள்? தரமான ஜல்லியை தான் முதலில் போட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக நெடுஞ்சாலை த்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து நெடுஞ் சாலைதுறை அதிகாரிகள், கழிவு கலந்த பாறைப்பொடிகளை உடனே அப்புறப் படுத்தச் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாறைப் பொடிகள் டெம்போவில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

    ஏற்கனவே இந்த சாலை பணியால் திருவரம்பு முதல் நாகக்கோடு வழி யாக சென்று வரும் பஸ்கள் மாற்று பாதையில் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவியர், மருத்துவமனைக்கு செல்லும் வயதானவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு மிகவும் சிரம மான நிலை ஏற்படுகிறது.

    போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்படு வதால் சுற்று வட்டார மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நெடுஞ்சாலைத் துறையினர் போதிய அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சாலைப் பணியை தரமாக விரைந்து முடித்து போக்குவரத்து வசதி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காதலனை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன
    • விசாரணை அதிகாரி உறுதி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23).

    கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் தனது மகன் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷரோன்ராஜின் தந்தை ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மகனின் காதலியான குமரி மாவட்ட இளம்பெண் வீட்டுக்குச் சென்று வந்தபிறகு தான் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாற சாலை போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடு பட்டனர்.

    அப்போது குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஷரோன்ராஜ் படித்த போது, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதும், அவரது வீட்டுக்கு சென்று வந்தபிறகு தான் ஷரோன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால், அக்டோபர் 14-ந் தேதி ஷரோன்ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கிரீஷ்மா கொடுத்த தும் இதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஷரோன்ராஜ் இறந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, ஷரோன்ராஜூடன் அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசார ணையில், கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து அடிக்கடி ஷரோன் ராஜிக்கு கொடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையில் கொலைக்கான தடயங்களை மறைத்ததாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசார் சீல் வைத்திருந்த கிரீஷ்மாவின் வீட்டு கதவு பூட்டை யாரோ உடைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வழக்கில் திடீர் திருப்பமாக, தான் ஷரோன்ராஜை கொலை செய்யவில்லை என்றும், போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக கசாயத்தில் விஷம் கலந்ததாக ஒப்புக் கொண்டேன் என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    அவரது வாக்குமூலத்தால் வழக்கு விசாரணை பாதிக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதனை வழக்கின் விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். ஷரோன்ராஜை, கிரீஷ்மா ெகாலை செய்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக சேகரித்துள்ளோம். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம். கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளோம். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் கூறினார்.

    ×