என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 ஆயிரம் கிலோ"

    • பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.
    • இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து அவரிடம் இருந்த ரேஷன் அரிசி மற்றும் மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில் போலீசார் கண்கா ணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

    அவர் பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.

    இதைப்பார்த்த போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து அங்கு சோதனை செய்தனர்.

    அதில் ஈரோட்டில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 1,900 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானி துருப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன் (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து, அவரிடம் இருந்த 1,900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    ×