என் மலர்
நீங்கள் தேடியது "மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு"
- இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன்.
- மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அமர்நாத் தலைமையில் அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.
"இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில்,
நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யமாட்டேன்.
மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர்(குற்றவியல்) லட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.