என் மலர்
நீங்கள் தேடியது "ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரி"
- விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
- விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் அமைந்துள்ள ராஜாஸ் பல்மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா 3 நாட்கள் நடைபெற்றது.
விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், ராஜாஸ் கல்லூரிகளின் நிறுவனர் சர்தார் டாக்டர் எஸ்.ஏ.ராஜாவின் கல்வி சேவையை பாராட்டியும் பேசினார்.
கல்லூரி தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். விழாவில் செல்வம் அறக்கட்டளை தலைவர் சோபியா ராஜா, ராஜாஸ் மருத்துவ நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சபீனா ஜேக்கப் மற்றும் இயக்குநர் டாக்டர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி துணை தலைவர் டாக்டர் அந்தோணி செல்வி வர வேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூஸ் முருப்பல் ஆண்டறிக்கையை சமர்பித்தார். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.