search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி கமிஷனர்"

    • பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    • வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார்.

     திருப்பூர் :

    வெள்ளகோவில் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஆர்.மோகன் குமார் பணி மாறுதல் அடிப்படையில் காலியாக உள்ள பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதை நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது காலியாக உள்ள வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த மணி என்பவர் பணியிட மாறுதலாக கூடலூர் நகராட்சியின் பொறியாளராகவும், திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபு ரிந்து வந்த தீபன் என்பவர் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    • எரிய கூடிய கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புதல் போன்ற பணிகள் நடக்கிறது.
    • ரெடியூஸ் ரீயூஸ் ரீசைக்கிள் மையத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்படைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது :- திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி மூலம் வீடு, வீடாக மற்றும் கடைகள் தோறும் சேகரமாகும் அனைத்துவித கழிவுகளும் பல்வேறு நிலைகளாக தரம் பிரித்து நகரில் 2 இடங்களில் உள்ள உரம் தயாரிக்கும் மையங்கள் மூலம் உரம் தயாரித்தல், விற்பனை செய்யக் கூடிய கழிவுகளை விற்பனை செய்தல், எரிய கூடிய கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புதல் போன்ற பணிகள் நடக்கிறது.

    திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2016-ன் படி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து வித எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், மின்னணு உபகரணங்கள் போன்ற பொருட்கள் பூமியில் சேர்வதை தடுக்கும் வகையிலும், அவைகளை அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் . நமது நகராட்சிப் பகுதிகளில் கழிவுகளை நகராட்சி மூலம் சேகரித்து அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதால், இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தங்கள் வீடு, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பயனற்ற நிலையில் உள்ள கழிவுகளான எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், பயனற்ற கடிகாரங்கள், ரேடியோக்கள், டி.வி., செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்ள், உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள ரெடியூஸ் ரீயூஸ் ரீசைக்கிள் (ஆர்.ஆர்.ஆர்) மையத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜூன் மாதம் 4-ந் தேதி வரை ஒப்படைத்து நகரில் தூய்மையினை காக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர், கமிஷனர் வலியுறுத்தியுள்ளனர்.
    • பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்களை போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக கமிஷனர் முகமது சம்சுதீன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகை யையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுத்தம் செய்யப்பட்டு அகற்றப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை களை சாலைகளிலும், வாறுகால்க ளிலும் கொட்டாமல் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அதன்படி வார்டு எண் 6 இந்து நாடார் மண்டபம் அருகில், வார்டு எண் 10 வாடியூர் ரோடு, வார்டு எண் 14 சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகில், வார்டு 18 வரகுணராமபுரம், வார்டு எண்21 நகராட்சி அலுவலகம் பின்புறம் ஆகிய இடங்களில் குப்பைகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் மேற்கண்ட இடங்களில் வழங்க கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற எந்த பொருட்களையும் போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் கருப்பசாமியால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராமர், ஜெயபிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    • சுரண்டை நகராட்சி கமிஷனர் ஆக பணியாற்றிய லெனின் கடந்த ஜூன் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • சுரண்டை நகராட்சி புதிய கமிஷனராக முகம்மது சம்சுதீன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி கமிஷனர் ஆக பணியாற்றிய லெனின் கடந்த ஜூன் மாதம் பத்மநாதபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தென்காசி கமிஷனர் பாரி ஜான் பொறுப்பு கமிஷனராக பணியாற்றினார்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம்,திருமுருகன் பூண்டியில் கமிஷனர் ஆக பணியாற்றிய முகம்மது சம்சுதீன் சுரண்டை நகராட்சி கமிஷனராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முகமது சம்சுதீன் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவருக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், அன்னப்பிரகாசம், சங்கரநயினார், கோமதிநாயகம், நகர் மன்ற உறுப்பினர்கள் சாந்தி தேவேந்திரன், அமுதா சந்திரன், உஷா பிரபு, வேல்முருகன், பரமசிவன், சிவசண்முக ஞானலட்சுமி,செல்வி, கல்பனா அண்ணபிரகாசம், ராமலட்சுமி கணேசன்,அந்தோணி சுதா ஜேம்ஸ், தி.மு.க. நகர இளைஞரணி முல்லை கண்ணன் ராஜா, டான் கணேசன்,சமூக ஆர்வலர் கார்த்திக் மற்றும் தொழிலதிபர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×