என் மலர்
நீங்கள் தேடியது "பெட்டிக்கடைக்காரர் பலி"
- ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடைக்காரர் பலியானார்.
- இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பழங்கோட்டையை சேர்ந்தவர் பாலு (வயது 53).இவர் பெட்டிகடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டின் மேல் பகுதியில் தேவி பட்டினத்தில் இருந்து திருப்பாலைக்குடி செல்லும் பிரதான மின்கம்பி செல்கிறது. மழையின் காரணமாக தொய்வடைந்து இருந்த இந்த மின்கம்பி குறித்து மின் வாரியத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் பாலு மாடிக்கு செல்லும் போது தலையில் மின் கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட பாலு மனைவி மற்றும் அவரது தம்பி மனைவி ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர்.
இதில் பாலுவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் திருப்பாலைக்குடி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் முதலுதவி பெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்தபோது பாலு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார். காயமடைந்த பாலு தம்பி மனைவி காளிஸ்வரி (39) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.