என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குளச்சலில்"
- கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன
- வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்
நாகர்கோவில் : குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேள மீன்கள் பிடிக்கப்படுகிறது. தற்போது விசைப்படகுகளில் கிளாத்தி மீன்கள் கிடைத்து வருகிறது. இன்று காலை கரை திரும்பிய விசைப்படகுகளில் அதிகமான கிளாத்தி மீன்கள் கிடைத்தன. இதை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். இந்த மீன்களை கோழி தீவனம் தயாரிப்பிற்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.20-க்கு விலைபோன கிளாத்தி மீன்கள் பின்னர் விலை வீழ்ச்சியடைந்து ரூ.16-க்கு விலைபோனது. இதனால் விசைப்படகினர் கவலையடைந்தனர்.
- நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது வரவேற்று பேசினார்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குளச்சல்:
குளச்சல் அ.தி.மு.க. நாடாளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நகர அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், ஆனக்குழி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது வரவேற்று பேசினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர் பஷீர் கோயா மற்றும் செர்பா, குமாரதாஸ், ஜில்லட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தலைமை கழகத்தின் ஆணைக்கிணங்க குளச்சல் நகரில் உள்ள 25 வாக்குச்சாவடிகளிலும் 5 மகளிர், 5 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அடங்கிய 19 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர தேர்தல் பணி செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
- ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.
நாகர்கோவில் : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் கடந்த சில வருடங்களாக குமரி மாவட்டம் குளச்சல் அருகே முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுபாலா (24). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மதுபாலா கடந்த 2 மாத மாக குளச்சலில் ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு துணிக்கடை யில் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிய மதுபாலா வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மாடசாமி நெல்லை மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் சென்று தேடினார். ஆனால் மதுபாலா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாடசாமி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மதுபாலாவை தேடி வந்தனர். இந்நிலை யில் மதுபாலா நேற்று முன்தினம் இரவு குளச்சல் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது அவர் பெள்ளாச்சியில் தோழியை பார்க்க சென்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனே மதுபாலாவின் வீட்டினருக்கும், மாடசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் போலீஸ் நிலை யம் வர ழைக்கப் பட்டனர். கணவரை பார்த்ததும் மதுபாலா மாடசாமியுடன் செல்ல மாட்டேன் என மறுப்பு தெரிவித்தார். கணவர் வேண்டாம் என்றால் முறைப்படி விவாகரத்து பெற வேண்டும் என மதுபாலாவுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர் மதுபாலாவை அவரது அம்மாவுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இரவு அம்மாவுடன் படுத்து தூங்கிய மதுபாலா நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாயமானார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.
- ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்டோர் வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.
குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகு களுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜூலை 31-ந்தேதி நள்ளிர வுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளன.
ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.
கடந்த 1-ந்தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற குளச்சல் விசைப் படகுகளில் 3 படகுகள் நேற்று முன்தினம் காலை கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன.அவற்றுகளை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.இது முந்தைய காலம் ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 8 படகுகள் இன்று கரை திரும்பின. இவற்றுள் குறைந்த அளவு ஓலக்கண வாய் மற்றும் தோட்டுக்கண வாய் மீன்கள் கிடைத்தன.அவற்றை மீன் ஏலக்கூ டத்தில் குவித்து வைத்து மீனவர்கள் விற்பனை செய்தனர். தற்போது விசைப்படகுகளில் கணவாய் மீன்களின் சீசனா கும். குறைந்த அளவு கணவாய் கிடைத்ததால் விசைப்படகினர் டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
- குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி:
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று மாலை குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வீடுகளுக்கு இடையே அதிக அளவில் ரேசன் அரிசி கடத்து வதற்கு பதுக்கி வைத்தி ருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 100 சிறு பிளாஸ்டிக் மூட்டை களில் சுமார் 2 டன் கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனே அவற்றை பறிமுதல் செய்து உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ரேசன் அரிசியை அங்கு பதுக்கி வைத்திருந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.
- ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.
இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.
- மேற்கு அலை தடுப்பு சுவர் பகுதி சாலையில் செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் ஏசுதாஸ் காலனியை சேர்ந்தவர் ஆன்றோ வினி (வயது 47). இவர் விசைப்பட குகளுக்கு டீசல் நிரப்பும் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 9-ந்தேதி இரவு இவர் மோட்டார் சைக்கிளில் குளச்சல் துறை முக பகுதிக்கு சென்றார். மேற்கு அலை தடுப்பு சுவர் பகுதி சாலையில் செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார்.அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலிலில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். பலியான தொழி லாளி ஆன்றோ வினிக்கு குயின் ஜெமி என்ற மனைவி யும், 1 ஆண், 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்