search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த் பிறந்தநாள்"

    • சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
    • புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினர் பலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காசோலைகளை வழங்கி வருகின்றனர். சில நடிகர்கள் பாதிப்பு பகுதிகளில் நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு நிவாரண பொருட்களை புயல் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

    புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.

    கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் மளிகை பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கோவிலில் உள்ள ரஜினியின் 3 அடி உயர சிலைக்கு கலை நயம் மிகுந்த திருவாச்சியும், நாக கிரீடமும் வேத மந்திரங்கள் முழங்கிட சாத்தப்பட்டது.
    • பிறந்தநாள் விழா பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் ரஜினி கோவில் சார்பில் பிரசாதமும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பேருந்து நிலையம் அருகே ரஜினி காந்தின் தீவிர பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான கார்த்திக் என்பவர் இந்தியாவிலேயே முதல் முறையாக ரஜினிக்கு கோவில் கட்டியுள்ளார்.

    அங்கு மூன்று அடி உயர கருங்கல் சிலையுடன் நிறுவியுள்ள ரஜினி கோவிலில் தினமும் பூஜைகள் நடத்தி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ரஜினி பக்தர்களின் ஆன்மீக தலமாக திகழ்ந்திடும் இங்கு ரஜினிகாந்தின் 73-வது பிறந்ததின விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கோவிலில் உள்ள ரஜினியின் 3 அடி உயர சிலைக்கு கலை நயம் மிகுந்த திருவாச்சியும், நாக கிரீடமும் வேத மந்திரங்கள் முழங்கிட சாத்தப்பட்டது. மேலும் இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நீண்டகாலம் நலமுடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு அருள் வழங்கிட வேண்டி அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தப்பட்டது.

    அதன் பின்னர் பிறந்தநாள் விழா பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் ரஜினி கோவில் சார்பில் பிரசாதமும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து ரஜினி கோவில் நிறுவனரும், முன்னாள் ராணுவ வீரருமான கார்த்திக் கூறுகையில், ஆன்மீக கடவுள் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த தின விழா திருமங்கலம் நகரிலுள்ள கோவிலில் இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கோவிலிலுள்ள அவரது சிலைக்கு திருவாச்சி மற்றும் நாக கிரீடம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெற்றது.

    நாங்கள் குடும்பத்துடன் இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறோம். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருந்து வெளிவர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது என்றார். 

    • ரஜினி வீட்டில் இல்லை என அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் ரஜினியை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

    சென்னை:

    ரஜினி பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பூங்கொத்து, கேக் மற்றும் ரஜினி உருவ போஸ்டருடன் அவர்கள் காத்து நின்றனர்.

    ரஜினி வீட்டில் இல்லை என அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் ரஜினியை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். இதனிடையே ரஜினி நடித்து வரும் 170-வது படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியிடப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதையொட்டி ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்து உள்ளனர். வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் எக்ஸ் தளங்களில் தலைவர் 170, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

    ரஜினி பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகளை ரசிர்கள் நள்ளிரவு முதல் வழங்கியதுடன் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    • ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    சென்னை:

    ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அன்பு சகோதரர் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×