என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ரஜினிக்காக கட்டிய கோவிலில் சிலைக்கு திருவாச்சி, நாக கிரீடம் வைத்து வழிபாடு
- கோவிலில் உள்ள ரஜினியின் 3 அடி உயர சிலைக்கு கலை நயம் மிகுந்த திருவாச்சியும், நாக கிரீடமும் வேத மந்திரங்கள் முழங்கிட சாத்தப்பட்டது.
- பிறந்தநாள் விழா பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் ரஜினி கோவில் சார்பில் பிரசாதமும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பேருந்து நிலையம் அருகே ரஜினி காந்தின் தீவிர பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான கார்த்திக் என்பவர் இந்தியாவிலேயே முதல் முறையாக ரஜினிக்கு கோவில் கட்டியுள்ளார்.
அங்கு மூன்று அடி உயர கருங்கல் சிலையுடன் நிறுவியுள்ள ரஜினி கோவிலில் தினமும் பூஜைகள் நடத்தி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ரஜினி பக்தர்களின் ஆன்மீக தலமாக திகழ்ந்திடும் இங்கு ரஜினிகாந்தின் 73-வது பிறந்ததின விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் உள்ள ரஜினியின் 3 அடி உயர சிலைக்கு கலை நயம் மிகுந்த திருவாச்சியும், நாக கிரீடமும் வேத மந்திரங்கள் முழங்கிட சாத்தப்பட்டது. மேலும் இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நீண்டகாலம் நலமுடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு அருள் வழங்கிட வேண்டி அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தப்பட்டது.
அதன் பின்னர் பிறந்தநாள் விழா பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் ரஜினி கோவில் சார்பில் பிரசாதமும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ரஜினி கோவில் நிறுவனரும், முன்னாள் ராணுவ வீரருமான கார்த்திக் கூறுகையில், ஆன்மீக கடவுள் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த தின விழா திருமங்கலம் நகரிலுள்ள கோவிலில் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோவிலிலுள்ள அவரது சிலைக்கு திருவாச்சி மற்றும் நாக கிரீடம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெற்றது.
நாங்கள் குடும்பத்துடன் இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறோம். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருந்து வெளிவர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது என்றார்.