என் மலர்
நீங்கள் தேடியது "கும்பல் தாக்குதல்"
- போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
- போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆல்வார்:
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்புரா கிராமத்தில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தது.
பின்னர் அந்த கும்பல் காரில் பயணம் செய்த 3 பேரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். இருந்த போதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர்.சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
உடனே போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு வாசிம் என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வள்ளியம்மன் கோவிலில் இன்று 6-வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- தி.மு.க பிரமுகர் பிரபாகருக்கு ஆதரவாகவும் சிலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
வடவள்ளி
கோவை மருதமலை அடிவார பகுதியில் வள்ளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இன்று 6-வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு, பஸ் நிலைய பகுதி உள்பட சில இடங்களில் விழாவுக்கு வருபவர்களை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி ேகாவில் முன்பு பேனர் வைத்து விட்டு, மருதமலை அடிவார பஸ் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு பேனர் வைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தி.மு.க. பிரமுகர் பிரபாகர் மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் இங்கு பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும், அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் சம்பவ இடத்திற்கு வந்து, நாங்கள் பல முறை இங்கு பேனர் வைத்துள்ளோம். இங்கு வைப்போம் என தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் என்பவர் தன்னை சிலர் தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து ஏராளமான அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். இதேபோல் தி.மு.க பிரமுகர் பிரபாகருக்கு ஆதரவாகவும் சிலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இரு தரப்பிலும் ஏராளமனோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸ் நிலையத்திற்குள் போலீசார் திவாகரின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது போலீஸ் நிலைய வளாகத்திற்குள் 5 பேர் கும்பல் திடீரென கட்டையுடன் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு நின்றிருந்த அ.தி.மு.க.வினரை சரமாரியாக தாக்கினர். இதில் சிலர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக அ.தி.மு.கவினர் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.கவினரை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த அம்சராஜ்(38), சபரி(24), கார்த்திகேயன்(25), பேச்சியப்பன்(27), மணிகண்டன்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. நிலைமையை கட்டுப்படுத்த அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.