search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி எம்.பி"

    • இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.
    • அன்று சாந்தி.. இன்று இமானே கெலிஃப். உங்களின் வலிமையும் உறுதியும் ஊக்கமளிக்கிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப்

    ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.

    குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.

    குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியுள்ளார். "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இமானே கெலிஃப்புக்கு திமுக எம்.பி., கனிமொழி ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "எப்போதுமே தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அன்று சாந்தி.. இன்று இமானே கெலிஃப். உங்களின் வலிமையும் உறுதியும் ஊக்கமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.
    • மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எம்.பி கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.

    மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது.
    • இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அடங்குவர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் தற்போதைய கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை, எம்.பி.க்கள் குழு சந்தித்தது.

    இதற்கிடையே, இந்தக் குழுவினர் இன்று டெல்லி திரும்பினர். டெல்லி திரும்பிய பிறகு தி.மு.க. கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்துப் பேசினோம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை. தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே உதவவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் கூறினர்.

    மணிப்பூரில் உள்ள முகாம்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் மாநில அரசு மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.

    மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை, மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய். மணிப்பூரில் நிரந்தர அமைதி உருவாவதற்கான சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • சிவாஜி நடிப்பில் வெளியான 'பராசக்தி' படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார்.
    • இப்படம் குறித்து கனிமொழி எம்.பி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

    கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் கடந்த 1952ம் ஆண்டு வெளியான படம் 'பராசக்தி'. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார். இப்படத்தில் 'ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வரை ஓடினேன்' என்று சிவாஜி பேசும் வசனம் இன்றளவும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


    பராசக்தி

    பராசக்தி

    இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு 'பராசக்தி' படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி மற்றும் மறைந்த சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பிரபுவுக்கு சால்வை அணிவித்து கனிமொழி கவுரவித்தார். 


    கனிமொழி எம்.பி

    கனிமொழி எம்.பி

    இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற 'பராசக்தி' திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். நவீனத் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும், முற்போக்கு கலை வடிவத்திற்கும் சான்றாக இருக்கும் பராசக்தி, இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது ஆச்சரியமூட்டும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    • 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
    • தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது தீப்பெட்டி மீதான சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

    தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ.40-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்து விட்டது.

    தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்பு பாஸ்பரஸ் ஒரு கிலோ விலை ரூ.400-ல் இருந்து ரூ.1000 ஆக அதிகரித்து விட்டது.

    90 சதவீதம் பெண்கள் உள்பட 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×