என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செமஸ்டர் தேர்வுகள்"

    • மாண்டஸ் புயல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் தடைப்பட்டன.
    • தொழில்நுட்ப கல்வி இயக்கம் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை)யும், கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ந் தேதியும் (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

    • ஜனவரி 19 மற்றும் 20ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு
    • 2வது முறையாக தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து 9ந் தேதி நடைபெற இருந்த தேர்வு, வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை)யும், கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 31-ந் தேதியும் (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி கடந்த 9ந் தேதி நடைபெற இருந்த தேர்வு, ஜனவரி 19ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 20ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெரும் மழை கொட்டித் தீர்த்தது.
    • 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெரும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் கடந்த 18, 19-ந்தேதிகளில் இந்த 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் முழுவதும் நடைபெற இருந்த தேர்வுகளையும் ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள இணைப்பு கல்லூரிகளுக்கும், நாகர்கோவில் மையத்தில் உள்ள தொலைதூர கல்வித் திட்டத்துக்கும் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது
    • 1983ல், ஜபல்பூர் பல்கலைக்கழகம் "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" என பெயர் மாற்றப்பட்டது

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ஜபல்பூர் (Jabalpur) நகரம்.

    99.63 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது.

    இப்பல்கலைக்கழகம், 1983ல், "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" (Rani Durgavati Vishwavidyalaya) என பெயர் மாற்றப்பட்டது.

    சுமார் 20 நாட்களுக்கு முன்னர், முதுநிலை கணினி அறிவியல் (M.Sc Computer Science) படிப்பின் முதல் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை மாணவர்களுக்கு வெளியிடப்பட்டது.

    நேற்று முன் தினம் (மார்ச் 5) நடைபெறுவதாக இருந்த இத்தேர்விற்கான நுழைவுச்சீட்டையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் வழங்கி விட்டது.

    இதையடுத்து தேர்விற்காக 20 நாட்களுக்கும் மேலாக படித்து வந்த மாணவர்கள், மார்ச் 5 அன்று பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தனர். ஜபல்பூரை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல மாணவர்கள் அதிகாலையிலேயே புறப்பட்டு ஜபல்பூர் வந்திறங்கி, பல்கலைக்கழக தேர்வு மையத்திற்கு வந்தனர்.

    ஆனால், அங்கு தேர்விற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படாதது கண்டு அதிர்ந்த மாணவர்கள், இது குறித்து பேராசிரியர்களிடமும், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தேர்வு ஏதும் இல்லை என்றும், கேள்வித்தாள் கூட தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இப்பதிலால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கள் கண்களை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துணை வேந்தர் சந்தித்தார்.

    இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். கே. வர்மா, "தேர்வாணையர், (exam controller) தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த தகவலை மாணவர்களுக்கு முறைப்படி தெரிவிக்க அதிகாரிகளும், பேராசிரியர்களும் தவறி விட்டனர். யார் இச்சம்பவத்திற்கு பொறுப்பு என கண்டறிய ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    இந்திய தேசிய மாணவர் சங்க (National Students' Union of India) தலைவர் சச்சின் ரஜக், "பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தையும் கவனக்குறைவையுமே இது காட்டுகிறது. ஒரு தேர்விற்கான கால அட்டவணையையும் தேர்விற்கான மற்ற ஏற்பாடுகளையும் செய்ய ஒரு புகழ் பெற்ற பல்கலைக்கழகம் எவ்வாறு மறக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.

    ×