என் மலர்
நீங்கள் தேடியது "ஜிகா வைரஸ்"
- கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- ஜிகா வைரஸ் பாதிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 'ஜிகா வைரஸ்' பாதிப்பு உறுதியாகி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், "மாநிலத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி உள்ளது. இதனால் நிலைமையை அரசு கவனமாக கண்காணித்து வருகிறது. அதைக் கையாள எங்கள் துறை நன்கு தயாராக உள்ளது" என்றார்.
- நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
- மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியபோது டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியது. அதன் தொடர்ச்சியாக கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது.
அடுத்தடுத்து தொற்று நோய்கள் பரவியது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அங்கு தற்போது ஜிகா வைரஸ் பரவி வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது தலச்சேரி. இங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வக்கீல்கள், நீதிபதிகள், ஊழியர்கள் சிலருக்கு தலைவலி, கண்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன.
இதையடுத்து அங்கிருந்த 3 நீதிமன்றங்கள் 2 நாட்கள் மூடப்பட்டன. நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் நோய் பாதிப்பு இருந்த 23 பேரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில் நீதிமன்ற ஊழியர்கள் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது. இதனால் மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, ஜிகா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கர்ப்பிணி பெண்கள் சுகாதாரத்துறையின் சிறப்பு கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.
- கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தோற்று ஏற்பட்டால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
- ஜிகா வைரஸ் தோற்றால் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவலால், எச்சரிக்கையாக இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜிகா வைரல் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரல் உள்ளதா என்று சோதிக்கக வேண்டும் என்றும் ஜிகா வைரல் இருந்தால் கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில் கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தோற்று ஏற்பட்டால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கும், குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்பின் அறிகுறிகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
- சிறுவனின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக சுகாதாரத் துறையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், மரிபாடு அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுவனை மீட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுவனின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவனின் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் ஜிகா வைரஸ் தொற்று பரவி உள்ளதா என்பதை அறிய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மந்திரி ராம் நாராயண ரெட்டி கூறுகையில்:-
ஜிகா வைரஸ் தொற்று குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதால் சுகாதாரத் துறை சார்பில் கொசுவை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக சுகாதாரத் துறையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றார்.