என் மலர்
நீங்கள் தேடியது "ரஹானே"
- சூர்யகுமார் யாதவ் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது.
- சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 வகையாக தரம் பிரித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இதன்படி 'ஏ பிளஸ்' பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி, 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடி, 'பி' பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடி, 'சி' பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியமாக அளிக்கப்படுகிறது.
அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வருகிற 21-ந்தேதி நடக்கும் கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது. இதில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய 20 ஓவர் அணியின் வருங்கால கேப்டன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சி பிரிவில் இருந்து குறைந்தது பி கிரேடுக்கு தரம் உயர்த்தப்படுகிறார்.
முன்னாள் துணை கேப்டன் ரஹானே, மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் மூவரும் ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அதே சமயம் 20 ஓவர் போட்டியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கடந்த ஓராண்டாக அதிரடியில் வெளுத்து கட்டுகிறார். இதனால் அவர் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இஷான் கிஷன் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
- கேப்டன் டோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் ஒவ்வொருவரையும் சுதந்திரமாக விளையாட அனுமதி அளித்துள்ளனர்.
- எந்த வடிவிலான கிரிக்கெட் என்றாலும் அதில் ஒவ்வொரு முறையும் எனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவேன்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை ஊதித்தள்ளியது.
இதில் மும்பை நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை சென்னை அணி, அஜிங்யா ரஹானேவின் மிரட்டலான அரை சதத்தால் 18.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 19 பந்துகளில் 50 ரன்களை கடந்து நடப்பு தொடரில் மின்னல்வேக அரைசதம் அடித்த வீரர் என்ற சிறப்பை ரஹானே பெற்றார். இவர், மொத்தம் 61 ரன்கள் (27 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார்.
இதுகுறித்து ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எப்போதும் வான்கடே ஸ்டேடியத்தில் ரசித்து அனுபவித்து விளையாடுவேன். ஆனால் இங்கு நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியதில்லை. இந்திய அணிக்காக இங்கு ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாட விரும்புகிறேன்' என்றார்.
மேலும் ரஹானே கூறுகையில், 'ஆடும் லெவனில் எனக்கு இடம் கிடைக்குமா என்பதில் உறுதி இல்லாமல் இருந்தது. 'டாஸ்' போடுவதற்கு சற்று முன்பு தான் எனக்கே நான் விளையாடுவது தெரியவந்தது. மொயீன் அலிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆடும் லெவனில் என்னை சேர்த்திருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.
ஐ.பி.எல். ஒரு நீண்ட தொடர். இதில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எந்த நேரத்தில் வாய்ப்பு வந்தாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டும். கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் ஒவ்வொருவரையும் சுதந்திரமாக விளையாட அனுமதி அளித்துள்ளனர்.
அழுத்தமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்படி தோனி என்னிடம் கூறினார். அதன்படியே நான் விளையாடினேன்.
என்னை பொறுத்தவரை நான் நம்பிக்கையை ஒரு போதும் விட்டுவிடமாட்டேன். உற்சாகமாக, ஆர்வமுடன் தொடர்ந்து விளையாடுவதில் தான் எல்லாமே இருக்கிறது. எந்த வடிவிலான கிரிக்கெட் என்றாலும் அதில் ஒவ்வொரு முறையும் எனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
- பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை.
தர்மசாலா:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
பஞ்சாப் அணி
பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து முறையே 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப், சாம் கர்ரன், ரபடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.
தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களில் ஆடாத கேப்டன் ஷிகர் தவான் முழு உடல் தகுதியை இன்னும் எட்டவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார்.
தவான் கடைசி 2 லீக் ஆட்டங்களில் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர் கடந்த ஆட்டத்தில் ஆடிய அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்றும் வெற்றி கூட்டணியை தொடரவே விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை அணி
நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டு 10 புள்ளி பெற்று இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்ட சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது.
சென்னை அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 509 ரன்), ஷிவம் துபே (350) அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி கணிசமான பங்களிப்பை அளித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.
சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் நாடு திரும்பி விட்டதால் எஞ்சிய ஆட்டங்களில் ஆடமாட்டார். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது கடினம் தான். இது சென்னை அணிக்கு பின்னடைவாகும். காய்ச்சல் காரணமாக முந்தைய ஆட்டத்தில்
ஆடாத துஷர் தேஷ்பாண்டேவும், உலகக் கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கைக்கு சென்றதால் கடந்த ஆட்டத்தை தவறவிட்ட பதிரானாவும் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழி தீர்க்குமா?
பஞ்சாப் அணியிடம் முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும்.
அதேநேரத்தில் மும்பை இந்தியன்சுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடை போடும் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும்.
எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னையும், 14 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங் அல்லது ராகுல் சாஹர்.
சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஷர்துல் தாக்குர் அல்லது முகேஷ் சவுத்ரி, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா, பதிரானா.
மற்றொரு ஆட்டத்தில் லக்னோ-கொல்கத்தா
லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர் நல்ல பார்மில் உள்ளனர். ரிங்கு சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த அதிரடி இன்னும் வெளியாகவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா மிரட்டக்கூடியவர்கள். ஆல்-ரவுண்டராக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அசத்துகிறார்கள்.
நேரடி ஒளிபரப்பு
லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்ற கொல்கத்தா அணி அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்த ஆர்வம் காட்டும். இதேபோல் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த லக்னோ அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.
இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை என்று ரோகித் சமாளித்தார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையயடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரோகித், "நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருப்போம். இந்திய அணியில் இல்லாவிட்டாலும் நாங்கள் கண்டிப்பாக சந்திப்போம். ரஹானே மும்பையில் இருப்பதால் அடிக்கடி அவரை பார்ப்பேன். புஜாரா ராஜ்கோட்டில் உள்ளதால் அவரை அடிக்கடி சந்திக்க முடிவதில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே புஜாராவும் ரஹானேவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை ரோகித் உணர்ந்தார்.
பின்னர் பேசிய அவர், "நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை. நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள். புஜாராவும் ஓய்வு பெறவில்லை. உங்களின் கேள்வியால் தான் இப்படி பதில் கூறி விட்டேன்.
இந்த நேரத்தில், மூவரும் இந்திய அணியில் இல்லை, ஆனால் அஸ்வின் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ரஹானே மற்றும் புஜாரா இந்திய அணிக்கு திரும்பி வரக்கூடும். அவர்களுக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
- மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமர் நாசிர் மிர் இன்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
31-வயது உமர் நாசிர் ஆக்ரோஷ பந்துவீச்சு காரணமாக மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உமர் நாசிர் பந்துவீச்சில் ரோகித் சர்மா மூன்று ரன்களுக்கும், ரஹானே 12 ரன்களுக்கும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.
கடந்த 2013 முதல் விளையாடி வரும் மிர் இதுவரை 57 போட்டிகளில் 138 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிர் 54 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் இதுவரை 32 விக்கெட்டுகளை கைப்ற்றியுள்ளார்.
புல்வாமாவை சேர்ந்தவரான உமர் நாசிர் மிர் கடந்த 2018-19 தியோதர் கோப்பை தொடரின் போது இந்தியா சி அணிக்காக விளையாடினார். ரஞ்சி கோப்பை தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் உமர் நாசிர் மிர் மற்றும் யுத்விர் சிங் தலா நான்கு விக்கெட்டுகளையும், ஆகிப் நபி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.