என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜன் செல்லப்பா"
- அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை.
- அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி.
மதுரை:
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது சதய விழாவையொட்டி மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் ராஜன் சொல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும் என்று தி.மு.க.வி.னர் கூறுவதில் உண்மையில்லை.
எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க.வை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். இரட்டை இலை, தலைமை கழகம், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ராஜதந்திரியாக பணியாற்றி வருகிறார்.
மற்றவர்களைப் போல தன்னை ஒப்படைப்பதற்காக அல்ல, அ.தி.மு.க.வை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவைப் போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை காக்க பணியாற்றி வருகிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. ஆகியவைகளில் எடப்பாடி பழனிசாமி தனக்குரிய பாணியில் செயலாற்றுகிறார்.
அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. பாராளுமன்ற தேர்தலுக்காக அல்ல, அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. மழைக்காலங்களில் பேரிடர் மீட்புத்துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அறிவிப்பையும் தி.மு.க. அரசு கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
- டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.
மதுரை:
மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கே: நேற்று இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பாஜக கூட்டணியில் இருக்கும் எல்லா தலைவர்களும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை எல்லாம் போட்டியிடுகிறார்கள். சேலத்து சிங்கம் என்று அழைக்கப்படும் எடப்பாடியாரோ, தங்கமணியோ ஏன் போட்டியிட பயப்படுகிறார்கள். வேறு ஒருவரை களத்தில் இறக்கிவிட்டு பலிகடா ஆக்குகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
பதில்: எதிர்க்கட்சி தலைவராக, சட்டசபை உறுப்பினராக எங்களுடைய அருமையான அண்ணன் எடப்பாடி இருக்கிறார். அவர் மிகச்சிறந்த அரசியல்வாதி. அவரை பொறுத்தவரை அவர்கள் செய்த தவறை நியாயப்படுத்த பார்க்கிறார்கள்.
ஒரு சட்டசபை உறுப்பினர் 2 தொகுதியில் ஒரு எம்.எல்.ஏ.க்கள் நிற்க கூடாது என்பது இப்போது மக்கள் மத்தியில் பாலிசியாக இருக்கிறது. 2 பேர் பணம், அரசாங்க பணம் வீணாவது, ஒரே தொகுதியில் 2 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் நிற்பது தவறு என்பது மரபு என்பது போல் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு காலத்தில எம்.பி. நின்றார்கள், எம்.எல்.ஏ. நின்றார்கள். அந்த மரபு இருந்தது.
ஆனால் தற்போது தங்கமணி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். எடப்பாடி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். வேலுமணி, நான் சட்டசபை உறுப்பினராக இருக்கிறேன்.
இன்னொரு பதவி பொறுப்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு என்ன அவசியம் உள்ளது. நீங்கள் இத்தனை சட்டசபை உறுப்பினர்களை வீணாக்குகிறீர்கள். நீங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை.
மத்திய அமைச்சர் நேற்று பதவி ஏற்கிறார். நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தோல்வியை சந்திப்போம் என்று முன்பே தெரியும்.
ஓபிஎஸ்-க்கு நன்கு தெரியும் நாம் ஜெயிக்க முடியாது, இருக்கும் எம்.எல்.ஏ.வை கொஞ்ச நாள் வைத்திருப்போம் என்று.
அவர் கட்சி மாறி இருக்கிறார். சட்டசபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடப்போகிறது.
அருமை அண்ணன் நாவலர், மிகப்பெரிய திறமையாளர், பேச்சாளர், கட்சி பொதுச்செயலாளராக இருந்தவரே தென்னை மர சின்னத்தில் நின்றுபடாதபாடு பட்டார்.
இனிமேல் அவரை ஓபிஎஸ் என்று சொல்லாமல் பலாப்பழம் என்று தான் மக்கள் அழைக்கப்போகிறார்கள்.
தேவையில்லாத வேலையில் இறங்கி தன்னைத்தானே இழிவு படுத்திக்கொண்டார்.
சட்டசபை உறுப்பினர்களாக இருப்பவர்கள் வீணாக அரசு பணத்தை வீணடிக்க முயற்சிக்கிறார்கள். தோல்வியை சந்திப்போம் என்று தெரிந்தே நிற்கிறார்கள். இதுதான் உண்மையான நிலைமையே தவிர, இதில் டிடிவி எங்களை ஏன் குறை சொல்ல வேண்டும்.
எடப்பாடியார் ஏன் எம்.பி.யாக நிற்க வேண்டும் அவசியமே இல்லை.
அதிமுக 40 தொகுதிகளிலும் வென்று, சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் இந்திய துணை கண்டத்திற்கு பிரதமராக வர வேண்டும் என்றால் அன்று பிரதமராக வந்து ராஜ்ய சபா எம்.பி.யாக வந்து விட்டு போகிறார். டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.
அனைத்து மாநில கட்சிகளும் சேர்ந்து எடப்பாடியார் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்று உணர்ந்து தேவே கவுடா, சந்திரசேகர் எப்படி பிரதமர் ஆனாரோ அதுபோல் எடப்பாடியார் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கும்போது, பிரதமர் ஆக்க நினைக்கும்போது ராஜ்யசபா எம்.பி. ஆகி விட்டு போகிறார்.
அண்ணா முதலமைச்சராகும்போது ராஜ்ய சபை எம்.பி.யாக தான் வந்தார்.
நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் மண்ணை வாரிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
கே: எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார் என்று டிடிவி கூறுவது?
பதில்: மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவங்க சொன்னது ஒரு புறம். டிடிவி சொன்னது ஒரு புறம். டிடிவிக்கு நல்லா தெரியும். திமுகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. தேவையில்லாத வார்த்தைகளை பேசி வருகிறார்.
இப்போது அதிமுக ஜெயிக்கப்போகிறது, வெற்றி பெறப்போகிறது என்று தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் குறைகளை சொல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
நிச்சயமாக அந்த வாய்ப்புகள் இல்லை. அதிமுக தனித்து நிற்கிறது. தனி தலைவராக அண்ணன் எடப்பாடியார். இப்போது ஒப்பற்ற தலைமையோடு மிச்சிறந்த தலைமையோடு இன்று மக்கள் மத்தியில் எங்கே பார்த்தாலும் எடப்பாடியார் தான் பேச்சு.
இன்றைய அரசியலில் மக்கள் மத்தியில் எடப்பாடியார் தான் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஈர்ப்பு சக்தியால், பேச்சாற்றலால், பணியாற்றலால், மிகச்சிறந்த உண்மையான உணர்வுகளோடு பேசுகிற காரணத்தால் இன்று மக்கள் பேசுகிறார்கள். அவர் உள்ளத்தில் இருந்து பேசுகிறார். அதனால் நடக்கிறது. வெற்றியோடு நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
- தி.மு.க. ஆட்சியை சூரசம்ஹாரம் செய்வார் எடப்பாடி பழனிசாமி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
- அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க. அரசு விரைவில் அமைய துணை நிற்க வேண்டும்.
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்ப ரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட் பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல். ஏ. தலைமை தாங்கி பேசியதாவது-
இன்றைக்கு அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீறு கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இன் றைக்கு நல்ல நாள் முருகன் அசுரனை வதம் செய்கிற சூரசம்ஹாரம் நடக்கின்ற நாளாகும். எனவே தான் இந்த சிறப்புமிக்க இந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.
தமிழக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் தீமையான காரியங்களை தி.மு.க. அரசு செய்து வரு கிறது. அன்றைக்கு அசுரன் எப்படி மக்களை வாட்டி வதைத்தானோ அது போல முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தமிழக மக்களை பல் வேறு வரிச்சுமைகளை விதித்து வாட்டி வதைத்து வருகிறார். அதிலிருந்து விடுவிக்க முருக பெருமான் அவதாரம் எடுத்தது போல இன்றைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப் பாடியார் புதிய அவதாரம் எடுத்து தி.மு.க. என்ற அசுரனை சூரசம்ஹாரம் செய்து விரைவில் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தி தருவார்.
அந்த வகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க. அரசு விரைவில் அமைய துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்.
- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை
மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இறுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நன்றி உரையாற்றினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி இன்றி தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் விலையேற்றம், வரி சுமை ஆகியவற்றின் காரண மாக தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த ஆட்சியின் கொடூர பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கழகத்தின் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியை தான் மக்கள் சாமியாக நினைக்கிறார்கள். அதற்கு சாட்சியாக தான் இந்த மாநாட்டில் அலை கடலென மக்கள் வெள்ளம் திரண்டு வந்துள்ளது.
எனவே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கி விட்டது. தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி நமது எடப்பாடி யாரை தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும்; ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
- தி.மு.க.வின் ஊழலை மறைப்பதற்காக அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் தேர் இழுத்து வழிபட்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியிடம் ஈர்ப்பு சக்தி உள்ளது. அவரால் மட்டுமே தொண்டர்களை வழிநடத்தி அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். இதற்காக அவரது உத்தரவின் பேரில் கட்சி பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம்.
ஒரு சிலரை தவிர அனைவரும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். இங்கிருந்து போனவர்களும் விரைவில் இரட்டை இலை இருக்கக்கூடிய எங்களிடம் வந்து சேருவார்கள்.
தமிழக அமைச்சரவை மாற்றம் ஏமாற்றமானது. தி.மு.க.வின் ஊழலை மறைப்பதற்காக அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., பகுதி துணை செயலாளர் செல்வகுமார் ஒன்றிய கவுன்சிலர் தவமணி மாயி, வட்ட செயலாளர்கள் பொன்முருகன், பாலா, நாகரத்தினம் எம்.ஆர்.குமார் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.
- மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உதயநிதி இப்போது எய்ம்ஸ் பற்றி வாய் திறக்காதது ஏன்? என ஆர்ப்பாடடத்தில் ராஜன் செல்லப்பா பேசினார்.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல.ஏ பேசியதாவது:-
தி.மு.க. அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம், மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்தது.தற்போது மின்கட்டணத்தை 53 சதவீதமும், வீட்டு வரியை 100 சதவீதமும் உயர்த்தி விட்டார்கள். பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செய்யும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போதைய விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிய ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றனர். அதற்குள் இந்த விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
தற்போது புயல், மழை காரணமாக மக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்திருக்கும் நிலையில் முதல்வர் தனது மகனுக்கு அமைச்சர் பதவியேற்பு விழா நடத்துகிறார். தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கூறி செங்கல்லை தூக்கி வாக்கு சேகரித்த உதயநிதி தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து வாய் திறக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடி மராமத்து பணி மூலம் தமிழகமெங்கும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். பொது மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆர்ப்பாட்டத்தில்
இவ்வாறு அவர் பேசினார்.
பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்யன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா?
- உதயநிதி அமைச்சர் பதவி பெற போகிறார், இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?.
திருப்பரங்குன்றம்:
தி.மு.க. அரசை கண்டித்து மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதலமைச்சர் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?.
செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா?. பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அண்ணா தி.மு.க.வுக்கு தொல்லை நீங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்