என் மலர்
நீங்கள் தேடியது "தீபிகா படுகோன்"
- பதான் படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- பேஷ்ரம் ரங் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
போபால்:
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடல் 'பேஷ்ரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூக வலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீச்சல் உடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடல் காட்சியின் காஸ்ட்யூமுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். #BoycottPathan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
- மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்
- 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர்சிங்2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்,செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும் அதில் தெரிவித்தனர்.
தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்ததும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்த்தினார்கள் .கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானி வீட்டு திருமண முன் வைபவ நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் ஜோடியாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் இன்று மதியம் மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர்சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்.அதன் பின் தீபிகா மட்டும் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார்.அவரை ரன்வீர் சிங் வழியனுப்பி வைத்தார்.
ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் தாராளமாக 'போஸ்' கொடுத்தார்.
அதன்பின் விமான நிலைய பாதுகாப்பு சோதனை பகுதியை நோக்கி சென்றார்.தீபிகா நீலநிற டெனிம் பேண்ட், பிரவுன் நிற ஸ்வெட்டர், பிரவுன் 'பூட்ஸ்' அணிந்து இருந்தார். மேலும் கருப்பு நிற 'கூலிங் கிளாஸ்' கண்ணாடியும் அணிந்தும் 'ஸ்டைல்' ஆக இருந்தார். 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்.
- இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD).
- படம் வரும் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறதது.
சென்ற ஆண்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றது.
மிகப் பெரிய பொருட் செலவிலான இந்த திரைப்படம் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதைகள பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. படம் வரும் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அமிதாப் பச்சனின் கேரக்டர் ரிவீலிங் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் அமிதாப் பச்சன் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது.
- அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.
பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகரும் தீபிகா படுகோனே கணவருமான ரன்வீர் சிங், இயக்குனர் அட்லி, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மற்றும் மகன் ஆகியோர் குத்து நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அவர்கள் ஆடிய நடனத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை அதிதி ஷங்கர் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை.
- இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.
இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகாபடுகோனே கர்ப்பம் அடைந்ததாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை. இதை தொடர்ந்து இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரது தரப்பு கூறுகையில்:-
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ஒரு அமைதியான பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். மற்றபடி அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வாழ்க்கையில் இப்போது அவர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் மிகவும் அழகாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி இந்த தருணத்தில் காத்திருக்கின்றனர் என்றனர்.
இந்நிலையில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஒரு சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
- புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பு கொண்டுள்ளது. வீடியோவில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாசுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
- பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில், இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இந்த புஜ்ஜி கதாப்பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில், இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.
கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள், பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார்.
- படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
படத்தில் புஜ்ஜி என ஒரு அதிநவீன கார் இடம்பெற்றுள்ளது, இதற்காக மகேந்திர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஒரு நிஜ காரை வடிவமைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை மகேந்தரா சிட்டியில் வைத்துள்ளனர். இந்த புஜ்ஜி கதாப்பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் புஜ்ஜி& பைரவா என்ற அனிமேடட் சிரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது.
- வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன்.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், ''எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது. இந்த வாழ்க்கையை அனுபவிக்கிறேன். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க ஒவ்வொரு நாளையும் ஜாக்கிரதையாக கழிக்கிறேன்.
முன்பு எடை கூடாமல் இருக்க விரும்பிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தேன். ஆனால் இப்போது விரும்பிய எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறேன். நான் அதிகம் சாப்பிட்டால் என் குழந்தைக்கு நல்லது என்று டாக்டர் தெரிவித்தார்.

ஆனாலும் வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன். என் பெற்றோர் அடிக்கடி வந்து பார்த்து செல்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
பிரசவம் செப்டம்பரில் இருக்கும் என்று டாக்டர் தெரிவித்து இருக்கிறார். பிரசவத்தை நினைத்து கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
- போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏ.டி. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் அறிவியல் கலந்து உருவாக்கப்பட்டுள்ள புராண காலத்து கதையான இந்த படம் வருகிற 27-ந்தேதி சர்வதேச அளவில் திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் பிரி ரிலீஸ் விழா மும்பையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
விழா தொடங்கியதும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். தீபிகா படுகோனே மேடையில் ஏறும்போது அவரது கையை பிடித்து உதவி செய்வதற்காக பிரபாஸ் முன் வந்தார். அதற்குள் ஓடி வந்த அமிதாப்பச்சன் நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் வாருங்கள் என கூறி தீபிகா படுகோனே மேடை ஏற உதவினார்.
பிரபாஸ், அமிதாப்பச்சன் இடையே நடந்த போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
தொடர்ந்து விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது:-
நாக் அஸ்வின் கல்கி 2898 ஏ.டி. படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இதெல்லாம் சாத்தியமா? என யோசித்தேன். மேலும் இவர் குடித்திருக்கிறாரா? என்று கூட நினைத்தேன். இப்போது படத்தை பார்க்கும் போது அற்புதமான படைப்பாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
- இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஏராளமான ரசிகர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ஒரு சுவாரசிய நிகழ்வை நடத்தியுள்ளனர். கல்கி2898 ஏ.டி என்ற திரைப்படம் வெளியாகும் நாளில் தெலுங்கில் நடிகர் ராஜசேகர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் பிரபாசின் கல்கி 2898 ஏ.டி.க்கு பதிலாக ராஜசேகர் நடித்த கல்கி படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.
இதையடுத்து ராஜசேகர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த முன்பதிவுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். கல்கி 2898 ஏ.டி திரைப்பட குழுவினருக்கு பாராட்டும் அவரது வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து `புக் மை ஷோ' நிறுவனம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர். யாரும் கவலைக் கொள்ள வேணாம், யாரெல்laaம் ராஜசேகரின் கல்கி திரைப்படத்திற்கு தவறுதலாக புக் செய்யப்பட்டதோ அவர்களக்கு பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு பதிவு செய்யப்படும், இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்யப்படும் என அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கல்கி 2898 கி.பி படத்தின் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் வரும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் 11 அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 6 டன் அதாவது 6000 கிலோ ஆகும்.
2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்புறம் 47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கமுடியும். இந்த வாகனத்தில் 2 ஹப்லெஸ் டயர் முன்புறத்தில் 1 ஹப்லெஸ் டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.
இந்த வாகனத்தின் மையத்தில் ஓட்டுநருக்கு ஒரு இருக்கை உள்ளது. வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை ஒன்று உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.