என் மலர்
நீங்கள் தேடியது "2 கும்கிகளுடன்"
- பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
- ஒற்றையானை அச்சத்தை போக்க ஆசனூரில் கும்கி யானைகளுடன் வனத்துறையினர் உலா வந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் பயிர்களை பாதுகாக்க இரவு நேர காவலுக்கு செல்லும் விவசாயிகளை ஒற்றை யானை தாக்குவதால் மனித விலங்கு மோதல் ஏற்படுகிறது.
அதேபோல, இந்த ஒற்றையானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் அட்டகாசம் செய்யும் ஒற்றையானை விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, ராமு ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை தாக்கும் ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கி யானைகள் தயாராக உள்ளன. தேவைப்படும் போது கும்கி யானைகளை கொண்டு மனித விலங்குகள் மோதலை தடுக்க நடவடிக்கையாக ஒரு மாதம் ஆசனூரில் கும்கிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஒற்றையானை அச்சத்தை போக்க ஆசனூரில் கும்கி யானை களுடன் வனத்துறையினர் உலா வந்தனர். ஒற்றையானை கிராமத்தில் புகும் வழித்தடத்தில் கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்து சென்றனர்.