search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மாணவர்"

    • அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
    • கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் ஸ்ரீ ராம் அம்பர்லா (வயது 25). இந்திய வம்சாவளியான இவர் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார். அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து அந்த மாணவி பகுதி நேரமாக அங்குள்ள ஒரு இந்திய உணவகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு அங்குள்ள பெய்லி நகர கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அம்பர்லா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.

    இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.

    • வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    • கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    • தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    சிகாகோ:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.

    உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.

    இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    • பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார். இதுகுறித்து நீல் ஆச்சாரியாவின் தாய் கவுரி ஆச்சார்யா, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, எனது மகன் நீல் ஆச்சார்யா மாயமாகி உள்ளார்.

    அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட உபெர் டிரைவர் பார்த்துள்ளார். எனது மகனை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.

    இந்த நிலையில் மாயமான மாணவர் நீல் ஆச்சார்யா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
    • இதில் இந்திய மாணவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அவருடன் விமானத்தின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார்.

    துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது.

    விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருமே பலியாகினர். இருவரது உடல்களையும் மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரிஷி அதுல் ராஜ் போபட் ஆய்வு மாணவராக படித்து வந்தார்.
    • இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அதன் அர்த்தத்தையும் இந்திய மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் தெரிவித்தார்.

    லண்டன்:

    இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் (வயது 27).

    லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரிஷி அதுல் ராஜ் போபட் ஆய்வு மாணவராக படித்து வந்தார். மேலும் சமஸ்கிருத மொழியில் காணப்படும் பல்வேறு புதிர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

    அப்போது 2500 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் கூறப்பட்ட இலக்கண புதிர் குறித்து படித்தார். அந்த புதிர் சமபலம் கொண்ட இரண்டு விதிகளை பற்றியது. இதில் எந்த விதி வெற்றி பெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க இந்திய மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் முயற்சி மேற்கொண்டார்.

    தொடக்கத்தில் அவருக்கு எந்த முடிவும் கிட்டவில்லை. என்றாலும் முயற்சியை கைவிடாத அவர் தொடர்ந்து புதிருக்கு விடை கண்டுபிடிக்க முயன்றார்.

    சமீபத்தில் அவர் அந்த புதிருக்கு விடை கண்டுபிடித்தார். இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அதன் அர்த்தத்தையும் அவர் தெரிவித்தார்.

    இதன் மூலம் அவர் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிருக்கு விளக்கம் கண்டுபிடித்து அறிஞர்களின் குழப்பத்திற்கு முடிவு கட்டியதாக ரிஷி அதுல் ராஜ் போபட்டின் ஆசிரியர் தெரிவித்தார்.

    ×