என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகுல் சோக்சி"

    • டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
    • பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    இந்த நிலையில் மெகுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்.

    அவர் மூலம் மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அவருக்கு பெல்ஜியத்தின் எப் ரெசிடென்சி கார்டு விசா வழங்கப்பட்டு உள்ளது. குடியுரிமை பெறுவதற்காக மெகுல் சோக்சி இந்தியா, ஆண்டிகுவா குடியுரிமைகளை மறைத்து போலி தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

    தற்போது மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருவதாக தெரிகிறது. மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதையடுத்து அவரை நாடு கடத்த பெல்ஜியத்தில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    • மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
    • மெகுல் சோக்சி, அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆனது

    புதுடெல்லி:

    இந்தியாவின் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயை கடனாக பெற்றார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கின் விசாரணையின் போதே மெகுல் சோக்சி, கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிகாவின் ஆன்டிகுவா தீவில் குடியுரிமை பெற்று தஞ்சம் அடைந்தார்.

    இந்நிலையில், மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியின் துணை மேலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இத்துடன் மெகுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது.
    • மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது.

    புதுடெல்லி:

    வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் பெற்றார். ஆன்டிகுவாவில் கடந்த 2018-ம் ஆண்டு குடியுரிமையும் பெற்றார். தேடப்படும் நபர்களை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆன்டிகுவா இல்லை. எனினும், அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டன. மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் சார்பில் ரெட்-கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது. இது இந்திய விசாரணை அமைப்புகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    மெகுல் சோக்சி விஷயத்தில் மத்திய பாஜக அரசு மீது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா குற்றம்சாட்டி உள்ளார். தப்பியோடிய மெகுல் சோக்சிக்கு சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவரை காப்பாற்ற பாஜக முயற்சிப்பதாக ராகவ் சத்தா கூறியிருக்கிறார்.

    மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. அதேபோல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை வழங்கத் தவறியதால், அவரது பெயர் ரெட் கார்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் ராகவ் சத்தா தெரிவித்தார்.

    • மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது.
    • இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    புதுடெல்லி:

    பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. இந்த வழக்கு விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இருக்கிறது. ஆனால், மோடிஜியின் நமது மெகுல் பாய், இன்டர்போலில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சிறந்த நண்பருக்காக பாராளுமன்றம் முடக்கப்படும்போது 5 ஆண்டுக்கு முன் தப்பியோடிய பழைய நண்பருக்கு உதவுவதில் இருந்து எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? என பதிவிட்டுள்ளார்.

    • டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்டிகுவா:

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பினார்.

    2018-ம் ஆண்டில் இருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வந்த மெகுல் சோக்சி திடீரென்று மாயமானார். சில நாட்களுக்கு பிறகு அவர் டொமினிக்கன் தீவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரை டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சியை அந்நாட்டுக்கு திரும்ப அனுப்ப அவரது வக்கீல்கள் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

    இதையடுத்து ஆண்டிகுவாவுக்கு அனுப்பப்பட்ட மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. இது தொடர்பான வழக்கு ஆன்டிகுவா அண்ட் பார்டிடா நாட்டில் உள்ள ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக ஆன்டிகுவா மற்றும் பார்டிடா தீவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல் முறையீடு உள்ளிட்ட அனைத்து சட்டப் பூர்வ வாய்ப்புகளையும் இழந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெகுல் சோக்சியின் ரூ. 2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.
    • பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு கோர்ட் அனுமதி.

    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குஜராத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் மெகுல் சோக்சி மீது புகார் எழுந்தது.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆன்டிகுவாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோசடி தொடர்பாக மெகுல் சோக்சி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    மேலும் அவருக்கு சொந்தமான ரூ. 2,565 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு பண மோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக இதுவரை 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


    இதைத்தொடர்ந்து மெகுல் சோக்சியின் ரூ. 2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.

    இதில் கிழக்கு மும்பை சாண்டா குரூசில் கெனி டவரில் உள்ள 6 அடுக்கு மாடி குடியிருப்புகள், டெல்லி மஹர்ஷத்ராவில் உள்ள சாண்டா குரூஸ் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மண்டலத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளும் அடங்கும்.

    ×