என் மலர்
நீங்கள் தேடியது "அங்கன்வாடி குழந்தைகள்"
- வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
- குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் வடுகபாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் சேர்க்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், சித்தம்பலத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும்.
- நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வாலிபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனர்.
இந்த மையத்தில் உள்ள அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்ற 2½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து தனது மழலை குரலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது எனவும், கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும். நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உடைந்து போன குடங்கள், டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை வீட்டை சுற்றி வைக்கக்கூடாது. நாம் குடிக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என சிறுவன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
மேலும் இதேபோல் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என செய்முறை விளக்கத்தோடு பேசும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.