search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் சிக்கனம்"

    • சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் சிறப்பு மின்வாரிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பை, எல்.இ.டி. பல்பு, கர்சீப் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடித்தபசை முன்னிட்டு சுவாமி சன்னதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சங்கரன்கோவில் நகர்புறம் -1 பிரிவு சார்பில் சிறப்பு மின்வாரிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மின்சார சிக்கனம், மின்சாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது? மின் சாதனங்களில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் அடங்கிய டிஜிட்டல் வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பை, எல்.இ.டி. பல்பு, கர்சீப் வழங்கப்பட்டது.

    இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர்கள் பால்ராஜ் கணேஷ், ராம ருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் நகர்ப்புற பிரிவு 1 உதவி மின் பொறியாளர் கருப்பசாமி. பணியாளர்கள் பொன்சுப்புராஜ், அரிராஜ், ராமமூர்த்தி, செல்லசாமி, முருகன், பேச்சி முத்து, மோகன்தாஸ், பணியாளர்கள் சுப்பிரமணி, மயில்ராஜன், நாகராஜ், லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இணைய தளம் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு, மின் சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
    • மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள்,மாணவ, மாணவிகள் பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில், மின் சிக்கன வார விழாவைநொட்டி பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் கடந்த ஒரு வார காலமாக மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் இணைய தளம் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு, மின் சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து, உடுமலை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் தலைமையில், மின்வாரிய பொறியாளர்கள், மற்றும் அலுவலர்கள்,போர்மென்கள்,லைன் மேன்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து பல்லடம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பை,பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மின் சிக்கனம் குறித்து விளக்கிப் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரத்தினகுமார், திருஞானசம்பந்தர், உதவிப் பொறியாளர்கள் தண்டபாணி, கார்த்திகேயன்,லதா, கவிதா, மற்றும் பல்லடம் நகர மின் உதவிப் பொறியாளர்கள் தங்கராஜ், வேலுச்சாமி, பாலசுப்பிரமணியம், மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள்,மாணவ, மாணவிகள் பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆலங்குடி செயற்பொறியாளர் நடராஜன் பஸ் ஸ்டாண்டிலிருந்து தலைமையேற்று கொடிய சைத்து துவக்கி வைத்தார். ஆலங்குடி நகரம் உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் முன்னிலையில் வகித்தார்.மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம் சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு மின்சாரம் நாட்டின் ஆதாரம் மின்சாரம் தேவை.மின்நிலையம் தவிர்த்து மின்தேவையை குறைப்போம் மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப் போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஒலிபெருக்கி மூலம் காமராஜர் சிலை அரசமரம் பஸ் ஸ்டாப் வடகாடு முக்கம் சந்தைப்பேட்டை வரை சென்றடைந்தது.மின்வாரிய ஊழியர்கள் கடைகள் பொதுமக்களிடையே மின்சிக்கன ம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வினியோகத்தினர். மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்பு ணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.




    • தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது.
    • மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    மின் சிக்கன வார விழாவையொட்டி தாராபுரம் கோட்ட மின் வாரியம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.

    இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மின் சாதனங்களான எல்.இ.டி. விளக்குகள், மின் விளக்குகள், மின் சாதனங்கள், குளிா்சாதனப்பெட்டி, வாஷிங்மிஷின் ஆகியவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். டி.வி, கணினி உள்ளிட்ட மின் சாதனங்களை சுவிட்ச் மூலம் நிறுத்த வேண்டும்.

    மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இணையதளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி 19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின் சிக்கன வார விழாவான 20-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

    கட்டுரை போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டு தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும். ஆங்கில போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/GMDToAAfehTNGLkZ6. மின்னாற்றல் சேமிப்பில் என் பங்கு, மின்னாற்றல் ஆடம்பரத்திற்கா? அத்தியாவசியத்திற்கா?, மின்னாற்றல் சேமிப்பின் அவசியம்.

    அதே போன்று ஓவியப்போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/gNFcYtxZaASBXVe8 .மின்னாற்றல் சேமிப்பும் பசுமை உலகமும், நாளைய இருளை தடுப்போம், இன்றே விழிப்புணர்வு பெறுவோம், இயற்கை முறை மின்சாரம் காலத்தின் கட்டாயம், மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள், மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு? மின்சாரம் நாட்டின் ஆதாரம். மின் சிக்கனம் தேவை இக்கணம் ஒரு யூனிட்டு சேமிப்பு இரண்டு யூனிட்டு உற்பத்திக்குச் சமம், 6 நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின் விரயம் தவிர்த்து மின் தேவையினை குறைப்போம், இன்றைய மின் சேமிப்பு வரும் சந்ததிக்கு வழிகாட்டி, மின் சிக்கனம் செய்வோம் இயற்கை வளங்களைக் காப்போம். திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் இணையதளத்தில் பதிவிடலாம்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×