என் மலர்
நீங்கள் தேடியது "கேஸ் சிலிண்டர்"
- எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவை.
- சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 818.50 லிருந்து ரூ.868.50 ஆக அதிகரித்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலர் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் குறையக்கூடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கடந்த வாரம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல.
அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விற்பனையின் லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை நுகர்வோருக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் மத்திய அரசே அதை எடுத்துக் கொண்டதும் தவறு ஆகும்.
எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவை. அவை மக்களைச் சுரண்டக் கூடாது. அதேபோல், மத்திய அரசும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விலைக் குறைப்பு நன்மையை தானே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், கலால்வரி உயர்வை திரும்பப் பெறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது ரூ.2 குறைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
- கேஸ் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
- வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை.
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது.
தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.410க்கு விற்கப்பட்டடதாக அசோக் கெலாட் பேச்சு
- ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், 'ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வகைப்படுத்தப்படும். பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். மேலும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படும்' என்றார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு வரை ரூ.410க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், இப்பாது ரூ.1,040க்கு விற்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஏழைகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
- விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.
சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பின்னால் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவு.
- வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கேஸ் சிலிண்டர் திருட முயன்றதாக கூறி ஒருவரை ஓடும் ஆட்டோவில் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் நடந்த இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வீடியோவில், ஓடும் ஆட்டோவின் பின்னால் ஒரு நபர் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இதில், அந்த நபரின் கால்கள் சாலையில் தேய்ந்தபடி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக கமென்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
ஆட்டோ பின்னால் ஒரு நபர் அலறியபடி இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது.
- விபத்தில் சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது.
சமையலுக்கு பயன்படும் LPG சிலிண்டர் மூலம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் விபத்துகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் LPG சிலிண்டர் இருப்பதால் அதை கவனமாக கையாளும் விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுவது அவசியம்.
இந்த கூற்று 100 சதவீதம் உண்மை என நிரூபிக்கும் வகையில் மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது. அந்த, சிசிடிவி வீடியோவில் பெண் ஒருவர் வீட்டின் சமயலறையில் நின்றுகொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அவரது அருகில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது.
அந்த அதிர்வில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்த அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். ஆனாலும் அந்த சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது. சிலிண்டரில் கொஞ்சமான அளவே கேஸ் இருததால்தான் பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் அந்த பெண் உயிர்தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
- கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.
செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
- வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம்.
- விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- 2017 ஆம் ஆண்டு பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார்.
- அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தான் வாங்கிய சிலிண்டரின் விலையை விட ரூ.1.50 அதிகமாக பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்த சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் இழப்பீடாக ரூ.4,000 பெற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டரை டெலிவரி செய்தவர் அவரிடமிருந்து 755 ரூபாய் வசூலித்துள்ளார். மீதம் 1.50 ரூபாயை சக்ரேஷ் கேட்டபோது அந்த பணத்தை கேஸ் ஏஜென்சியிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனுதாரருக்கு 4000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இது மட்டுமன்றி சக்ரேஷிடம் பெற்ற ரூ1.50யை ஆண்டுக்கு 6% வட்டியுடன் சேர்த்து வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'இது வெறும் 1.50 ரூபாய்க்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல. எங்களது உரிமை மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இது' என்று வழக்கில் வெற்றி பெற்ற சக்ரேஷ் தெரிவித்தார்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
- பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.
அவ்வகையில், ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் யுவ உதான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு 8,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.