search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டம்"

    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
    • நலத் திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதி யோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அர விந்த் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத் தொகையினை வழங்கினார். இதில் துணி வியாபாரம் செய்திட 17 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவும், மாடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலுள்ள கால்நடைகள் கொள்மு தல் செய்யவும், ரூ.15 ஆயி ரத்திற்கு தீவனம் மற்றும் மேற்கூரை அமைத்தல் என 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட் சம் மானியமாகவும், மீன் வியாபரம் செய்துவரும் 4 நபர்களுக்கு தொழில் விரிவு படுப்படுத்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக காய்கறி வியாபரம் மற்றும் கிராமிய கலை மற்றும் பூ கட்டுதல் செய்திட தலா ஒரு நபருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் 2 நபருக்கு ரூ. 1 லட்சம் மானியம் என மொத்தம் 30 திருநங்கைகளுக்கு மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகையினை யும், வருவாய்துறையின் சார்பில் ஒரு நபருக்கு விதவை உதவித்தொகை ஆணையினையும் கலெக் டர் அரவிந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித் துணை கலெக்டர் திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி மற்றும் அனைத் துத்துறை அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

    தாலுகா, வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளில் முதல்வரின் முகவரித் துறை சிறப்பு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டரின் அறிவிப்பில், 'முதல்வரின் முகவரித் துறை சிறப்பு குறைதீர்வு வாரமானது இன்று (20-ந் தேதி) தோவாளை வட் டாட்சியர் அலுவலகம், அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளிலும், 21-ந் தேதி அகஸ்தீஸ்வரம் வட் டாட்சியர் அலுவலகம், ராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளிலும், 22-ந் தேதி கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம், தக்கலை மற்றும் திருவட்டார் வட் டார வளர்ச்சி அலுவல கங்களிலும், 23-ந் தேதி கிள்ளியூர் மற்றும் திருவட்டார் வட்டாட்சி யர் அலுவலகம், கிள்ளியூர் மற்றும் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களி லும், 24-ந் தேதி விள வங்கோடு வட்டாட்சியர் அலுவலகம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலு வலகங்களிலும் நடைபெற வுள்ளது.

    பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரின் முகவ ரித்துறை சிறப்பு குறைதீர்வு வாரத்தில் கொடுத்து பயன் பெறலாம்' என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

    ×