search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமை"

    • மேயர் மகேஷ் உறுதி
    • தெப்பக்குளம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி யில் தழுவிய மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சேத மடைந்து மோசமாக காட்சி அளிக்கிறது.

    தற்போது இந்த தெப்பக் குளம் தூர்வார பட்ட நிலையில் குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேசை சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் மேயர் மகேஷ் தழுவிய மகாதேவர் கோவில் தெப்பக்குளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஆணை யாளர் ஆனந்த மோகன் பொறியாளர் பாலசுப்பிர மணியன் கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். ஆய்வு பணி மேற்கொண்ட மேயர் மகேஷிடம் தெப்பக்குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கு குடியிருந்த மக்கள் தெரிவித்தனர். உடனடியாக மேயர் மகேஷ் இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பேசினார்.

    இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், தெப்பக்குளம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். அவர்கள் இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். தெப்பக்குளத்தை தற்போது சீரமைக்க வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும்.மழை காலம் வந்துவிட்டால் சீரமைப்பது கடினம். எனவே மழைக்கு முன்னதாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×