என் மலர்
நீங்கள் தேடியது "விளைவு"
- வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும்.
- இளம் வழக்கறிஞர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை தாங்கியது.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிவஞானம், ஆர்.எஸ்.பி.சவுந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவ்விழாவில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் 18 மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஏற்புரை வழங்கி உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் பேசுகையில், வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும். இளம் வழக்கறிஞர்கள் பொறு மையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இளம் வழக்கறிஞர்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் மட்டுமின்றி, ஒழுக்கத்தை கடைப்பிடித்து நீதியை நிலை நாட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தை முழு அதிகாரத்துடன் கூடிய முதன்மை மாவட்ட நீதிமன்றமாக அமைத்துத்தர நீதியரசர்களிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.