search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லேசர் சிகிச்சை"

    • வாழ்வியல் முறைகள் மூலத்திற்கு முக்கிய காரணம்.
    • மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும்.

    மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 50சதவீத மக்கள் தங்கள் வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் மூல நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் 5 சதவீதம் பேர் நிரந்தரமாக மூலநோய் பாதிப்பை பெற்றிருக்கிறார்கள் என தேசிய மருத்துவ நூலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

    ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய்கள் இருக்கும். மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும். அப்போதுதான் மூலம் உருவாகும். நார்ச்சத்து குறைவு, குறைவாக தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் தான் இந்த நோய் உருவாகிறது.

    சிகிச்சை முறை

    பொதுவாக மூலத்தில் 4 வகை உண்டு. அதுபோன்று அறுவை சிகிச்சை முறையிலும் 4 வகை இருக்கிறது. முதல் வகை - கத்தி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் (ஒப்பன் சர்ஜரி) முறை. இதில் வலி அதிகமாக இருக்கும். 2-வது முறையில் கத்திக்கு பதிலாக கருவிகள் உதவியுடன் மூலம் வெட்டி எடுக்கப்படும். இதிலும் வலி இருக்கும்.

    3-வது லேசர் சிகிச்சை முறை. மூலத்தில் 2 மற்றும் 3-வது வகை இருப்பவர்களுக்கும், வலி இருப்பவர்கள் மற்றும் ரத்தக் கசிவு உள்ளவர்கள், மருந்து கொடுத்தும் சரியாகாதவர்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சையின் போது ரத்தக்கசிவு வலி இருக்காது. காலையில் வந்து சிகிச்சை பெற்று விட்டு மாலையில் வீடு திரும்பிவிடலாம்.

    மூலத்தில் 4-வது வகை இருக்கிறது. இந்த வகைக்கு சிகிச்சை அளிக்க 'ஸ்டேபிலர்' என்று சொல்லக்கூடிய அதிநவீன கருவி உள்ளது. அந்தக்கருவியை பயன்படுத்தி மூலத்தை அகற்றிவிடலாம். காலையில் வந்தால் அறுவை சிகிச்சை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடவாம். ரத்தக்கசிவு, வலி இருக்காது. தையலும் தேவையில்லை.

    மூலத்துக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் வழி இல்லை. எந்த வகையான மூலம் இருக்கிறது என்று பரிசோதனை செய்து கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    • காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு-லேசர் சிகிச்சை மையங்கள் திறப்பு விழா நடந்தது.
    • தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக காரைக்குடி கே.எம்.சி. மருத்துவமனையில் தொடர்ச்சியான அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை சி.ஆர்.ஆர்.டி மற்றும் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இந்த தொடர்ச்சியான சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை முக்கியமாக கடுமையான சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த செயல்முறை மாற்றாக ஹீமோடியா பில்ட்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு 12 முதல் 24 மணி நேரம் நீடிக்கும்.தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.

    சிவகங்கை மாவட்டத்தில் முதன் முறையாக கே.எம்.சி.மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் சிகிச்சை முறையில் மருத்துவம் செய்யும் துறையும் தொடங்கப்பட்டுள்ளது.வெரிகோஸ் வெயின் உலகளவில் வயது வந்தோரில் 23 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. வெரிகோஸ் வெயின் பொதுவாக கால்களை பாதிக்கிறது.

    நீண்டநேரம் நின்று கொண்டிருப்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கால்கள் இந்த நோயால் பாதிப்பு ஏற்படும். கே.எம்.சி.மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் சிகிச்சைகளை வழங்குகி றார்கள். வெரிகோஸ் வெயினை குணப்படுத்துவதற்கு தொந்தரவில்லாத அனுபவத்தையும், சிறந்த வகையில் லேசர் அறுவை சிகிச்சையையும் வழங்க கே.எம்.சி. குழு தயாராக இருக்கிறது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு உயர்தர சிகிச்சையை காரைக்குடி பகுதியில் வழங்க முடியும் என்று கே.எம்.சி. மருத்துவமனை தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கே.எம்.சி மருத்துவமனை தலைமை மருத்துவர் சலீம் ஆர்த்தோ மற்றும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    ×