search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி கருத்தரங்கு"

    • ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது.
    • வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்தது.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் சாத்தையாறு உபவடி நில பகுதியான ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) சுப்புராஜ் தலைமை தாங்கினார். வயல்வெளி பள்ளியின் நோக்கம் மற்றும் வட்டார அளவில் செயல்படும் திட்டங்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் வாசுகியும், விதை நேர்த்தி பூச்சி அடையாளம் காணுதல், பயிர் கண்காணிப்பு பற்றி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியும், தீமை தரும் பூச்சிகளை வயல்வெளிகளில் அடையாளம் காணுதல், பூச்சிக்கொல்லி இல்லாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி மண்ணியல் துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார், வேளாண்மை விரிவாக்க உதவி பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் செயல்முறை விளக்கமளித்தனர்.விவசாயி வெங்கடசாமி வயலில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சத்தியவாணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சரவணகுமார், பாண்டியராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருணா தேவி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக வேளாண்மை துணை இயக்குனர் சுப்புராஜ் நெல்கோ 51 மற்றும் துவரை எல்.ஆர்.ஜி 52 விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். உதவி விதை அலுவலர் முத்துபாண்டியன் உடன் இருந்தார்.

    ×