என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தஞ்சை கலெக்டர் அலுவலகம்"
- நெற்பயிர்களுக்கு தேங்காய், காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றால் படையலிட்டு திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவிடம் இருந்து உரிய காவிரி நீர் பெற்றுதரக்கோரி விவசாய சங்க நிர்வாகி கக்கரை சுகுமாறன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அங்கு நெற்பயிர்களுக்கு தேங்காய், காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றால் படையலிட்டு திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக விவசாயி ஒருவர் மந்திரங்கள் ஓதி திதி கொடுத்தார்.
அப்போது காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையை நிர்வாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடி வழங்கவில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டு இந்த ஆலை நிர்வாகம் ஆலையை நிரந்தரமாக மூடியது. மேலும் ஆலை நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் மோசடியாக வங்கிகளில் சுமார் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
எனவே ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரியும் கடந்த 8 மாதங்களாக அந்த ஆலை முன்பு தொடர் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தடையை மீறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் நுழைய முயன்றனர்.
- போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு நுழைய முயன்றனர். இதனை அடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் சில விவசாயிகள் நுழைய முயன்ற போது அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
தொடர்ந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்