என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆரஞ்சுப் பழங்கள்"
- மால்டா ஆரஞ்சுப் பழங்கள் அறு வடைக் காலம் என்பதால், சேலம் மார்க்கெட்டுக்கு அப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.
- மால்டா ஆரஞ்சுப் பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ள தால், தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது.
அன்னதானப்பட்டி:
பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் விளையும் மால்டா
ஆரஞ்சுப் பழங்கள் அறு வடைக் காலம் என்பதால், சேலம் மார்க்கெட்டுக்கு அப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.
ஆண்டு தோறும் பிப்ர வரி, மார்ச் மாதங்களில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் விளையும் கமலா ஆரஞ்சுப் பழங்கள் தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநிலத்தில் மால்டா ஆரஞ்சுப் பழங்கள்
விளைச்சல் அதிகரித்துள்ள தால், தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சுப் பழங்களின் தோல் சற்று தடிமனாகவும், தட்டையாகவும் இருக்கும். அதிக புளிப்பு மற்றும் இனிப்பு தன்மை கொண்ட வையாக உள்ள இந்த மால்டா
ஆரஞ்சுப் பழத்தை, கின்னு ஆரஞ்சு என்று வியாபாரிகள் அழைக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 20 கிலோ கொண்ட ஒரு கிரேடு பாக்ஸ் ரூ.1500 என்று விற்கப்பட்டு வருகிறது. சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்கும் போது விலை குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.