என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாராயம் பதுக்கல்"
- ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருந்து அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தலைவாசல், ஊனத்தூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் , காட்டுக்கோட்டை உள்ள கல்வராயன்மலை, பட்டிமேடு வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருந்து அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தலைவாசல், ஊனத்தூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் , காட்டுக்கோட்டை உள்ள கல்வராயன்மலை, பட்டிமேடு வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மலை பகுதியை யொட்டியுள்ள கிராம பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மணிவிழுந்தான் வசந்தபுரம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றுமேடு விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி அங்கு கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள், அங்கு சென்று விவசாய நிலத்தை தோண்டினர். அங்கு வரிசையாக லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் ஊற்றி, பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மொத்தம் 28 டியூப்களில் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சாராயத்தை போலீசார் அழித்தனர்.
6 பேருக்கு வலைவீச்சு
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்கிற பெண்டு மனோகரன், அவரது மனைவி வசந்தா, மகன் மணிகண்டன், பிரபு என்பவரின் மனைவி தனலட்சுமி, அவரது மகன்கள் சுதன் மற்றும் சூர்யா உள்ளிட்ட 6 பேர், கள்ளச்சாராயம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் 6 பேரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
அதுபோல் ஆவாரை-சடையம்பட்டி செல்லும் பாதையில் உள்ள பட்டிமேடு வனப்பகுதி நீரோடை பகுதியில் சாராயம் காய்ச்ச 7 பேரல்களில் வைத்திருந்த 1400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அங்கு 3 லாரி டியூப்களில் இருந்த 90 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
இந்த கள்ளச்சாராயத்தை காய்ச்சும் பணியில் ஈடுபட்ட ஆவாரை முருகேசன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சின்ராஜ் (30), மணி (28), ரவி (31) ஆகியோரை ேதடி வருகின்றனர்.
மற்றொரு வாலிபர் கைது
இதே போல், கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் சாராயம் விற்ற ஆத்தூர் புங்கவாடி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் (37) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சங்கரா புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் துரை மணிகண்டன் (29) என்பவர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைமணிகண்டனை கைது செய்த போலீசார், 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்