என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி ஆற்றுக்கு"

    • இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது.
    • அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.90 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1263 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நேற்றைய விட இன்று குறைக்கப்பட்டுள்ளது. இன்று பவானி ஆற்றுக்கு 250 கன அடி என மொத்தம் 1250 கன அடி விதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 228 கனஅடியாக குறைந்து ள்ளது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.08 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.88 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும் உள்ளது.

    ×