என் மலர்
நீங்கள் தேடியது "கொடியேற்றுதல்"
- கொடியேற்றும் நிகழ்ச்சி நகர சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
- பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே மெலட்டூர் நகர வணிகர் நல சங்க அலுவலக திறப்பு மற்றும்கொடியேற்றும் நிகழ்ச்சி நகர சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க ஆலோசகர் வழக்கறிஞர் நேதாஜி, துணைத் தலைவர்கள்துரைராஜ், உதயகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமாகிய ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மெலட்டூர் கடை வீதியில் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சங்க அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். மேலும் மெலட்டூர் நகர சங்க வியாபாரிகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் சுப்பு, சோழா, தெற்கு மாவட்டசெயலாளர் சத்தியநாராயணன், மகேந்திரன், கோவிந்தராஜ், பாபநாசம் தொகுதி தலைவர் ஜெயராமன், மற்றும் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்களும் மெலட்டூர் நகர செயலாளர் பாலாஜி, துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வணிகர்கள் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மெலட்டூர் நகர நிர்வாகி மணிமாறன் நன்றி கூறினார்.