என் மலர்
நீங்கள் தேடியது "சன் ரைசர்ஸ் ஐதராபாத்"
- அஜிங்கியா ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது.
- இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
கொச்சி:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இதேபோல் இந்திய வீரர் மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கி உள்ளது.
கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் வாங்கி உள்ளது. அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் அணி வாங்கியிருக்கிறது. அஜிங்கியா ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது.
ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் இந்த ஏலத்தில் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.