என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கானா வாலிபர்"
- கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை அஜய் வாங்கினார்.
- அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஜிகித்யாலா மண்டலம், துங்கடி பகுதியை சேர்ந்தவர் ஓகுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் அவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.30 கோடி முதல் பரிசாக விழுந்தது.
லாட்டரியில் ரூ 30 கோடி பரிசு விழுந்த தகவல் அறிந்து அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குடும்ப வறுமை காரணமாக துபாயில் வேலைக்குச் சென்ற அஜய்க்கு லாட்டரியில் ரூ.30 கோடி கிடைத்ததால் அவரது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டுவிடும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம்,சரூர் நகர், வெங்கடேஸ்வரா காலனி சேர்ந்தவர் 55 வயது தொழிலதிபர். 23 வயதுடைடைய இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த பல்விந்தர் சிங் என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரிய வந்தது. பல்விந்தர் சிங் காதலியை அடிக்கடி சந்தித்து செல்போனில் பேசி வந்தார்.
இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பல்விந்தர் சிங் ஆத்திரமடைந்தார். துப்பாக்கியை வாங்கிக்கொண்டு நேராக தொழிலதிபர் வீட்டிற்கு வந்தார்.
தொழிலதிபருக்கு போன் செய்து வீட்டுக்கு வெளியே வரவழைத்தார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தொழிலதிபரை நோக்கி சுட்டார். இதில் தொழிலதிபரின் கண்ணில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- விக்னேஷ் மேல்பேட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டில் சிறுமியை தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
- விக்னேஷ்-க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நரசிம்மா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு அப்குடாவை சேர்ந்த சிந்து என்கிற விக்னேஷ் (22) என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டது.
இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் மணிகணக்கில் அரட்டை அடித்து வந்தனர். விக்னேஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய சிறுமி காதல் திருமணம் செய்வதற்காக கடந்த மாதம் 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது விக்னேஷ் மேல்பேட்டையில் உள்ள தனது நண்பரான சாகித் வீட்டில் அவரை தங்க வைத்துள்ளார். அங்கு வைத்து சிறுமியை விக்னேஷ் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டினார்.
இதனால் ஆதிரமடைந்த விக்னேஷ் அவரை கொலை செய்ய முடிவெடுத்தார். இதற்காக தனது நண்பர் சாகித் மற்றும் அவரது மனைவி கல்யாணியிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் வேறு ஒரு திட்டத்தை முன் எடுத்தார். திருமணத்தை முடித்து விட்டு சிறுமியை கொலை செய்ய முடிவு எடுத்தார்.
அதன்படி விக்னேஷ் சிறுமியை கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். திருமண போட்டோவை சிறுமியின் பெற்றோருக்கு விக்னேஷ் அனுப்பி வைத்தார். பின்னர் சாகித், கல்யாணி வீட்டில் இல்லாத சமயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தில் அழுத்தியும் கொலை செய்தார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பிய கல்யாணி சிறுமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தால். உடனே கணவருக்கு போன் செய்து வரவைத்தார். உடனே நண்பர்கள் உதவியுடன் சிறுமியின் பிணத்தை பைக்கில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை குப்பையில் வீசினர்.
மகள் காணாமல் போனது குறித்து சிறுமியின் தாய் மியாபூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் குப்பைகளுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டனர். மேலும் விக்னேஷ் அவரது நண்பர்களான சாகித், கல்யாண் ஆகியோரை கைது செய்தனர்.
- ரவிதேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவருடைய மனைவி சுவர்ணா. தம்பதியின் மகன் ரவி தேஜா (வயது 26) மகள் ஸ்ரேயா.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சந்திரமவுலி தனது சொத்துக்களை விற்பனை செய்து மகன், மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு தனது வீடு உள்பட சொத்துக்களை விற்பனை செய்து ரவி தேஜா, மகள் ஸ்ரேயா ஆகியோரை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பினார்.
ரவி தேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார். பகுதி நேர வேலையாக அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்தார்.
கடந்த 19-ந் தேதி நியூ ஹேவன் என்ற இடத்தில் உணவு வாகனத்தில் ரவி தேஜா சென்று கொண்டிருந்தார்.
அப்போது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் அவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் சகோதரி ஸ்ரேயா GoFundMe.com என்ற ஆன்லைன் முகவரி மூலம் தனது குடும்பத்திற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதில் எனது சகோதரர் இறந்ததன் மூலம் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் தவிக்கிறோம். என்னுடைய தாய் குடும்பத் தலைவியாக உள்ளார். தந்தையால் தற்போது வேலைக்கு செல்ல முடியவில்லை.
எங்களை படிக்க வைப்பதற்காக எங்கள் வீடு உட்பட அனைத்தையும் விற்பனை செய்து விட்டோம். மேலும் என்னுடைய கல்விக்கடன், சகோதரர் இறுதிச்சடங்கு போன்ற செலவுக்காகக்காக நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது.
தயவுசெய்து அன்பு உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்யுங்கள் என உருக்கமாக அதில் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.
அவர்கள் இதுவரை 97 ஆயிரம் டாலர் அதாவது ரூ. 83 லட்சத்து 88 ஆயிரத்து 560 வழங்கி உதவி செய்துள்ளனர். ரூ.1.29 கோடி வரை நிதி திரட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.