search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்விக்கடன்கள்"

    • 255 மாணவர்களிடம் இருந்து ரூ.966.80 லட்சம் கல்விக்கடன் பெற விண்ணப்பம் வந்துள்ளது என்று கலெக்டர் கூறினார்.
    • ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வட்டார அளவிலான சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது.

    சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவ ர்களுக்கு சவுடாம்பிகை பொறியியல் கல்லூரியிலும், ராஜ பாளையம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வத்தி ராயிருப்பு வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்க ழகத்திலும், காரியாபட்டி வட்டாரத்தை சேர்ந்த மாண வர்களுக்கு தனி யார் கல்லூரியிலும், நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக்கிலும் முகாம்கள் நடந்தன.

    இதில் 156 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.486.06 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 15 மாணவ- மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.75.34 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டன.மேலும், சிவகாசி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் நடந்த முகாமில், 99 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.480.74 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 14 மாணவ, மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.99.12 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கல்விக்கடன் முகாம்களில் 255 மாணவ மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.966.80 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது.

    29 மாணவ- மாணவி களுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×