என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசனத்திற்கு"

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.71 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து மொத்தம் 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் பவானி சாகர் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 104.95 அடியாக உயர்ந்தது.

    இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.71 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 799 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி என மொத்தம் 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது
    • வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்

    அம்மாபேட்டை

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொ டர்ந்து மேட்டூர் வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். மேலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் வரத்துக்கு ஏற்ப வாய்க்காலில் தண்ணீர் திறப்பது சிறிது கால தாமதமும் ஆகலாம்.

    கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது அந்தந்த காலகட்டங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தண்ணீரை திறப்பதுண்டு. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேறும் நிலையில் 120 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 91 அடியாக உள்ளது.

    வாய்க்காலில் தண்ணீர் திறக்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் அதற்கு முன்பு வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்.

    அப்போது தான் பாசன த்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் கடை மடை வரை தங்கு தடை யின்றி செல்லு ம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கா ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×