என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரேயஸ் ஐயர்"
- 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிப்பு.
மிர்பூர்:
வங்காள தேசம் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி நாளான நேற்று இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். அஸ்வின் 42 ரன்களுடனும், ஐயர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வின் ஆட்ட நாயகன் விருதையும், புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் திகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் கஃப் குறிப்பிட்டுள்ளார்.