search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம் Demonstration"

    • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு., சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார்.

    20 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன் அலைக்கழிக்காமல் வங்கிகளில் வழங்க வேண்டும், மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே, தள்ளு வண்டி வழங்கியுள்ளது.

    அது போல் இங்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலையோர வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    • ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார்.
    • அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருப்பூர் :

    மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் சார்பில் பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாநில தலைவர் நல்லமுத்து, மாநில பொதுச்செயலாளர் திருப்பதி, மாநில பொருளாளர் மோகன், மத்தியக்–குழு உறுப்பினர்கள் காளிமுத்து, வடிவேல், முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். நூல் விலையை குறைத்து தொழிலை பாதுகாக்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×