search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வல்லபை அய்யப்பன் ஆலயம்"

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நாளை மண்டல பூஜை நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜைக்கான கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடந்தது.

    வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்ட ளையின் நிர்வாக அறங்கா வலரும், கோவில் தலைமை குருக்களுமான ஆர்.எஸ்.மோகன் கூறியதாவது:-

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெறும் மண்டல பூஜையானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நாளை (27-ந்தேதி) காலை 8 மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும்.

    அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்ம குளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷே கதத்துடன் ஆராட்டு விழா நடைபெறும். சன்னி தானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டு, மூலவருக்கு 33 வகையான அபி ஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணிவரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இரவு 12 மணிக்கு 2023ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ரகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு, பல ஆண்டுகளாக ராம நாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக அய்யப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிஷேகத்திற்கு நெய் கொண்டு வருவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டும் ராமநாதபுரம் மல்லம்மாள் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக சரணகோசம் முழங்க அபிஷேக நெய் கொண்டு வந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×