என் மலர்
நீங்கள் தேடியது "யாதவர் கல்லூரி"
- முடக்கப்பட்ட மதுரை யாதவர் கல்லூரியை மீட்டெடுப்போம் என மாநில பொது செயலாளர் பேசினார்.
- இறுதியில் ராமநாதபுரம் யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை நன்றி கூறி னார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில பொது செயலாளராக ராமநாதபுரம் வேலு மனோகரன் மகளிர் கல்லூரி தாளாளர் தொழிலதிபர் வேலு மனோகரன் பொறுப்பேற்றார். அவருக்கு பாராட்டு விழா ராமநாதபுரம் யாதவ சங்க திருமண மகாலில் நடந்தது. ராமநாதபுரம் யாதவ சங்க தலைவர் மணிமாதவன் தலைமை தாங்கினார். பாலமுருகன் வரவேற்றார்.
முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், தாலுகா யாதவ சங்க தலைவர்கள் ராமு யாதவ் (பரமக்குடி), நாகலிங்கம் (முதுகுளத்தூர்), தில்லைமுத்து யாதவ் (ராமே சுவரம்), ராமு (திருவாடனை), வழக்கறிஞர் முனியசாமி, அன்பு பாலகிருஷ்ணன், ராமேசுவரம் தொழிலதிபர் சந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநில புதிய பொது செயலாளர் வேலு மனோ கரனை வாழ்த்தி பேசினர். ராமநாதபுரம் தாலுகா யாதவ வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஜெயக்குமார், மூத்த வழக்கறிஞர் அன்புச் செழியன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் ஒப்புதலுடன் மாவட்டத்தில் யாதவ மகா சபை புதிய தலைவராக புத்தேந்தல் குரு பிரகலாதன், செயலாளராக முதுகுளத்தூர் கருப்பசாமி, பொருளாளராக பரமக்குடி கனகராஜ் ஆகியோர் நிய மிக்கப்படுவதாக தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில பொது செயலாளர் வேலு மனோகரன் அறிவித்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். மக்கள் தொகையில் நாம் 3-வது இடத்தில் இருந்து வருகிறோம். நமக்குரிய உரிமைகளை பெறுவோம். மாநில, மாவட்ட அமைப்பை வலுப்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது கோரிக்கையை அரசி டம் இருந்து சுலபமாக பெற முடியும். முடக்கப்பட்ட மதுரை யாதவர் கல்லூரியை கள ஆய்வு மேற்கொண்டு மார்ச் மாதத்திற்குள் மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியில் ராமநாதபுரம் யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.