search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "16 மையங்களில்"

    • தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 16 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.

    இந்த மையங்களில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் அரையாண்டு தேர்வு நிறைவு என்பதால் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக நேற்று ஒரு நாள் மட்டும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 16 மையங்களில் நடக்கிறது.

    காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன .

    இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×