search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன திட்டப்பணிகள்"

    • நுண்ணீர் பாசனத் திட்ட த்தின் கீழ் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து வகை விவசாயிகளுக்கும் நிதி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் வேளா ண்துறை மூலம் இதுவரை சுமார் 58 ஆயிரம் ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்ட த்தின் கீழ் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து வகை விவசாயிகளுக்கும் நிதி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வேளா ண்துறை மூலம் இதுவரை சுமார் 58 ஆயிரம் ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கரும்பு, பருத்தி, மக்காசோளம் போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும், பயறு வகை பயிர்கள் மற்றும் எண்ணை வித்துப்பயிர்களுக்கு தெளி ப்பான் மற்றும் மழை தூவுவான் போன்ற தெளிப்பு நீர் பாசன கருவி களும் மானியத்தில் வழங்க ப்படுகிறது.

    நடப்பு ஆண்டில் 1600 எக்டர் மற்றும் ரூ.20.17 கோடி இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு சென்னை வேளாண்மை இயக்குநரகம், அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாச னம்) கோபெருந்தேவி ஈரோ ட்டுக்கு வந்து ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்ன சாமி தலைமையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்த ப்பட்டது. இதில் சென்னை அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) கோபெருந்தேவி கலந்து கொண்டார்.

    இக்கூட்டத்தில் அனைத்து வட்டார வேளா ண்மை உதவி இயக்கு நர்கள், 23 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் பிரதிநி திகள் கலந்து கொண்டனர்.

    இந்நேரடி ஆய்வின்போது சென்னை வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) கோபெருந்தேவி நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுவது, மானியம் விடு விப்பது தொடர்பாக வட்டார வாரியாகவும், நுண்ணீர் பாசன நிறுவ னங்கள் வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டு திட்ட செயலாக்கப்பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் பவானி அடுத்த மயிலாம்பாடி பகுதியில் செந்தில்குமார் என்பவரின் வயலில் கரும்பு பயிருக்கு அரசு மானியத்தில் அமைக்க ப்பட்ட நுண்ணீர் பாசன ப்பணிகள் குறித்தும், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கப்பட்ட தரைநிலை நீர் தேக்க தொட்டி பணி களை சென்னை வேளா ண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) கோபெருந்தேவி ஆய்வு மேற்கொண்டார்.

    இத்திட்டத்தில் சிறு-குறு விவசாயிகள் அரசு விதி முறைகளின்படி நுண்ணீர் பாசனம் அமைக்கும் பட்சத்தில் 100 சதவீத மானியமாக அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.48 ஆயிரத்து 253 மற்றும் இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரையில் 75 சதவீத மானி யத்தில் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.37 ஆயிரத்து 842 வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை பயிர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 38,762 ஏக்கர் பரப்பில் ரூ.143.54 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 15,113 விவசாயிகள் பயன டைந்துள்ளனர்.

    குறைந்த நீர் ஆதாரத்தினை கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறுவதோடு, அதிக அளவில் பயிர் சாகுபடி செய்வதற்கு நுண்ணீர் பாசன முறை மிகவும் ஏற்றதாகும்.

    எனவே விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்தார்.

    ×