search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம் கோவில்"

    • பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க முடிவு.
    • இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இச்சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

    • விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர்.
    • எனவே அவர் பொள்ளாப்பிள்ளையார் எனக் கூறுவதே சரியானது.

    சிவன் கோவில் என்றாலே விநாயகரை வணங்கி கோவிலின் உள்ளே செல்வது வழக்கம்.

    விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர்.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகர் பல திருப்பெயர்கள் தாங்கி சிதம்பரம் கோவிலில் காணக்கிடைக்கிறார்.

    முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னதி கொண்டு அவர்கள் திருநாமத்திற்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார் என்பது நம்பிக்கை.

    சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறை சுவடிகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையார் காட்டிக் கொடுத்ததாகக் கூறுவர்.

    பொல்லாப் பிள்ளையார் என்பது மிகப் பொல்லாதவன் என்ற அர்த்தத்தை தராது. பொள்ளா என்றால் உளியால் பொள்ளப்படாதவர், சுயம்பு என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

    எனவே அவர் பொள்ளாப்பிள்ளையார் எனக் கூறுவதே சரியானது.

    அத்திருப்பெயர் மருவி பொல்லாப் பிள்ளையார் ஆகிவிட்டது.

    • ஸ்ரீ ரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.
    • தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

    ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு அவைகளை பற்றி பார்ப்போம்.

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

    உற்சவர் அல்லாமல் மூலவரே வீதிவலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் தான்.

    சிதம்பரம் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

    சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டும் தான்.

    எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

    இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள்.

    நவம்பரில் கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோவில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறு மாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

    கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் 'பஞ்சவர்ணேஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீறுகுகை.

    தருமபுரியிலுள்ள பாப்பாரப்பட்டியில் இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

    ஸ்ரீ ரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.

    தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

    -ஷிவானி

    • பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.
    • சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த சீராய்வுக்கூட்டம் நடை பெற்றது.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 2 ஆண்டுகளில் 812 கோவில்களில் குடமுழுக்குகள் நடை பெற்றுள்ளதோடு, ரூ.4,754 கோடி மதிப்பீட்டிலான 5,060 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தீட்சிதர்கள் தாக்குதல் நடத்தியது அத்துமீறல் இல்லையா? கொரோனா காலத்திற்கு பின்பும் கனக சபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையிலே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னரும் கனசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது அத்துமீறல் இல்லையா? இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எதிலும் சட்ட மீறல் இல்லை. அது தீட்சிதர்களிடம் தான் உள்ளது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் விஷயத்தில் எந்த விளைவுகளையும் சந்திக்க அரசு தயங்காது, எங்கள் இயக்கமும் தயங்காது. பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.

    சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது. தற்போது எவ்வளவு நிதி உள்ளது என்பதனை கூற தீட்சிதர்கள் மறுக்கிறார்கள். கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை வசூலிக்க தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ரூ.6.36 லட்சம் வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டளைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எழுதிவைத்தி ருக்கின்ற இடங்களில் இருந்து வருகின்ற வருமானங்களும் கோவிலுக்கு செலுத்தப்படுகின்றன. இந்த வருவாயில் இருந்துதான் அந்த கோயிலின் மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பணிகள், நடவடிக்கைகள் நியாயப்படி செல்லுகின்ற பொழுது அதில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்களின் செயல்கள், பணிகள் அனைத்தும் அத்து மீறுகின்றபோதும், அடாவடித்தனங்கள் நிகழ்கின்ற போதும், பக்தர்களை துன்புறுத்து கின்றபோதும் நாங்கள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த நிலை தொடர்ந்தால் திருக்கோயிலை துறை மீட்பது குறித்து பரீசிலிக்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குட முழுக்குகளை நடத்திட மாதந்தோறும் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் குழு கூடி அனுமதி வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்துவதற்கு மாதந்தோறும் சீராய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திட அறங்காவலர் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை மேம்படுத்துதல் தொடர்பா கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

    அதேபோல திருச்செந்தூர் கோவில் எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
    • சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை (28-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது பொது தீட்ஷிதர்களின் உத்ஸவ ஆச்சார்யர் சு.ரா.நடராஜகுஞ்சிதபாத தீஷிதர் மார்கழி ஆருத்ரா கொடியேற்ற திருவிழாவை தொடங்கி வைத்து கொடி மரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க ஆருத்ரா தரிசன கொடியேற்ற நிகழ்வு தொடங்கியது

    நாளை (29-ந்தேதி) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, 30-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 31-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, ஜன.1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.

    4-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்கு திரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 5-ந் தேதி தேர்த்திரு விழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    அதன் பின்பு சொர்ண அபிஷேகம் நடைபெறும் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்ஷிதர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது, இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×