search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா வார்டு"

    • அவசர கால ஒத்திகை நடந்தது
    • மருந்து இருப்பு, வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்டவைகள் உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு

    வேலூர்:

    கொரோனா தொற்று மீண் டும் பரவி வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு கள் அனைத்து மருத்துவம னைகள் மற்றும் ஆரம்ப சுகா தார நிலையங்களில்கொரோ னாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள், ஆக்சிஜன் வசதி உள்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத் திருக்க உத்தரவிட்டுள்ளன.

    மேலும், கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச் சைக்கு வந்தால், அவர்களை எவ்வாறு கையாள்வது என் பது குறித்து ஒத்திகை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத் துவமனையில் நேற்று நடந் தது.

    அதன்படி, வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 300 படுக்கைகள்.

    தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. மேலும் அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனி யாக மானிட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் குழாய்கள் பொருத் தப்பட்டு கொரோனாவார்டு தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன.

    இதில் கல்லூரி டீன் திருமால்பாபு, மருத்துவ மனை கண்காணிப்பாளர் ரதிதிலகம் உள்ளிட்டோர் தலைமையில் மருத்துவ குழு வினருடன் சிகிச்சை அளிக் கும் முறைகள் குறித்து ஒத் திகை பார்க்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

    பென்ட்லேண்ட் மருத்துவமனையில் அவசர கால ஒத்திகை இதேபோல் வேலூர்பென்ட்லேண்ட் மருத்துவமனையில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தொடங்கி வைத்தார். மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண் டர் வசதி, மருந்து மாத்திரைகள் இருப்பு, வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்யப் பட்டது.

    நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சதீஷ் மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

    ×