என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரூ.2½ லட்சம்"
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கேரளாவுக்கு எம்சண்ட், என்சன்ட், ஜல்லி கல் ஆகிய கனிமவளங்களை இரவு நேரங்களில் கொண்டு செல்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கணரக வாகனங்களில் கனிமவளங்களை வெட்டி ஆரல்வாய்மொழி, சுருளோடு, குலசேகரம், நெட்டா வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வாகனங்கள் எல்லாம் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் சென்றுவிடும். அதிவேகமாக அதிகலோடுடன் இந்த வாகனங்கள் செல்வதால் ரோடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் விரைவில் ரோடுகள் பழுதடைந்து விபத்துக்கள் நடைபெறுவது மட்டும் அல்லாமல் உயிர்பலியும் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் குலசேகரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிவேகமாக வந்த 6 கனரக வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனங்களை மடக்கிபிடித்து சோதனை செய்தபோது அரசு நிர்ணயித்த எடையை விட அதிகளவு இருந்தது தெரியவந்தது உடனே 6 வாகனங்களுக்கு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அதிரடியாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.
- தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
- நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 334 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் ஒரு மாதம் ஆன பிறகும் இதுவரை திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்