என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோர்ட் உத்தரவு"
- எக்ஸ்பிரஸ் பஸ் சேவை குறைந்தபட்சம் 120 கி.மீ. வரை செல்ல வேண்டும் என்ற விதி புறக்கணிக்கப்படுகிறது.
- டவுன் பஸ்களுக்கு ஸ்டேஜ், புறநகர் பஸ்களுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு அதன் சேவையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ், அல்ட்ரா டீலக்ஸ், மாநகர பேருந்து ஆகியவற்றிற்கு தனித்தனியே கட்டண விகிதம் உள்ளது.
நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், 300 கி.மீ. தூரத்திற்குள் செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்ற பேருந்துகளுக்கு கட்டணம் வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டவுன் பஸ்களுக்கு 2வது, 3வது மற்றும் 4வது நிலைகளுக்கு (ஸ்டேஷ்) கட்டணம் முறையே ரூ.6, ரூ.7, ரூ.8 ஆக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நிறுத்தங்களுக்கு இடையே உள்ள குறைந்த தூரத்திற்கு கூட பயணிகளிடம் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உதாரணமாக எடுத்து கொண்டால், திருவள்ளூர்-சுங்கச்சாவடி வழித்தடத்தில் நிறுத்தங்கள் 2 கி.மீ. தொலைவில் இருந்தாலும் பயணிகளிடம் ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றனர்.
சென்னையில் புறநகர் பகுதிகளில் சில பஸ்களில் 1 கி.மீ.க்கும் குறைவான இடைவெளியில் ஸ்டேஜ்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் செயற்கையாக நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
புறநகர் சேவைகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் அதன் சாதாரண சேவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட 58 பைசாவுக்கு பதிலாக கிலோ மீட்டருக்கு 75 பைசா வசூலிக்கிறது. இந்த அதிக கட்டணம் குறைவான நிறுத்தங்களை கொண்ட எக்ஸ்பிரஸ் பஸ் சேவைக்கானது.
எக்ஸ்பிரஸ் பஸ் சேவை குறைந்தபட்சம் 120 கி.மீ. வரை செல்ல வேண்டும் என்ற விதி புறக்கணிக்கப்படுகிறது. பல பேருந்துகள் விரைவு கட்டணத்தில் 25 கி.மீ. மட்டுமே இயக்கப்பட்டு பயணிகளை ஏமாற்றி வருகின்றன.
அந்த பஸ்களில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குறைந்தபட்ச கட்டண விதிமுறைகளை மீறியும், பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை கணக்கிடுவதில் தவறான முறையில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது.
இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கேட்டதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விகிதப்படி தான் வசூலிக்கிறோம். கூடுலாக வசூலிக்கவில்லை.
டவுன் பஸ்களுக்கு ஸ்டேஜ், புறநகர் பஸ்களுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களுக்கு 19 ரூபாய் இருந்தால் அதனை 20 ரூபாயாக மாற்றியும் ரூ.21 ஆக இருந்தால் ரூ.20 ஆகவும் நிர்ணயித்து வசூலிக்கிறோம். 2018-ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது என்ன நிர்ணயிக்கப்பட்டதோ அதனை பின்பற்றுகிறோம் என்றார்.
- 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை அடையாறு காந்திநகரில் 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்பிரமணியன் இவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.
இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தங்களது நிதி நிறுவனத்தில் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமானோர் சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர்.
ஆனால் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனம் தாங்கள் கூறியது போல பொதுமக்களின் முதலீடு பணத்துக்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணியன் 17 துணை நிறுவனங்களையும் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது. மொத்தம் 51 கோடியே 47லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக் களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.
இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி கருணாநிதி 543 பக்கங்களை கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தமாக ரூ.191.98 கோடி அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதில் ரூ.180 கோடியை டெபாசிட் செய்த அனைவருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்து உள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.
- குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த 25 வயது இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்தார்.
காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பே பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி காதலனிடம் கூற அவர் உடனடியாக திருமணம் செய்ய மறுத்தார்.
இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால் அதனை எப்படி வளர்ப்பது என தெரியாமல் திணறிய இளம்பெண்ணை சந்தித்த சிலர், அந்த குழந்தையை தத்து கொடுத்துவிடுமாறு கூறினர்.
அப்போது இருந்த மனநிலையில் அந்த பெண்ணும் அதற்கு ஒப்பு கொண்டார். அவரிடம் பேசிய இடைதரகர்கள், குழந்தையை தத்து எடுப்பவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்றும், அவர்கள் குழந்தையை நன்றாக வளர்ப்பார்கள் எனவும் கூறினர்.
இந்நிலையில் குழந்தையை தத்து கொடுத்த பெண், அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். எனவே அவர், தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் வாங்க முயற்சி செய்தார்.
ஆனால் குழந்தையை தத்து எடுத்து அதனை வளர்த்து வரும் பெற்றோர் குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து குழந்தையின் தாய், மும்பை மாநகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜரான குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு தத்தெடுப்பு தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
அதன்படி வளர்ப்பு பெற்றோர் கோர்ட்டில் தத்தெடுப்பு ஆவணங்களை ஒப்படைத்தனர். அந்த ஆவணங்கள் கடந்த 2022-ம் ஆண்டே கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வளர்ப்பு பெற்றோர், குழந்தையை அதனை பெற்ற தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது. குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.
- வாகன உரிமையாளருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.30 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
- ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
அரியலூர்:
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் வசித்து வருபவர் சம்பத் மகன் முருகன் (வயது42). கடந்த 2014 ஆம் ஆண்டு வாங்கிய புதிய காருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 15,860 செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.இந்நிலையில், கடந்த 2015 ஜூன் முதல் வாரத்தில் வீட்டின் முன்பாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போய்விட்டது. ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து தமது காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளித்துள்ளார் முருகன். ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க 8 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனம் புகார் தாரருக்கு இழப்பீட்டு தொகையை தர மறுத்துவிட்டது.இதையடுத்து முருகன், தமக்கு காப்பீட்டுத் தொகை ரூ.3.20 லட்சமும், அந்நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் கேட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. இதனை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், வாகனம் காணாமல் போன பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய ஏற்பட்ட கால தாமதத்தை காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையை மறுக்க முடியாது. எனவே புகார்தாரர் தமது வாகனத்தை ரூ.4 லட்சத்துக்கு காப்பீடு செய்து 11 மாதங்கள் நிறைவடைந்து விட்டதால் சட்டப்படியான பிடித்தங்களாக 20 சதவீத தொகையை கழித்துக் கொண்டு ரூ 3.20 லட்சத்தை வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும். மேலும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை புகார்தாரருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழை அரும்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் புகார்தாரர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்