என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "'திருட்டு"

    29.12.2022 ந் தேதி இரவு காரணம்பேட்டை பகுதியில் தனபாலிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் வசித்து வரும் தனபால்(வயது 18) என்பவர் கடந்த 29.12.22 ம் தேதி காரணம்பேட்டை நால்ரோடு சிக்னல் அருகே நடந்து வரும் போது தனது சட்டை பையில் இருந்த செல்போனை பேசுவதற்காக எடுத்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்று விட்டதாக தனபால் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோடு உடுமலை பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில்29.12.2022 ந் தேதி இரவு காரணம்பேட்டை பகுதியில் தனபாலிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அதனையடுத்து செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை பள்ளிக்கரனை மனோகர் நகரை சேர்ந்த ராஜூ மகன் சந்தோஷ்குமார்,(33) என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கதவு, பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் குழந்தைவேல் மகள் கவிதபிரியா (43). இவர் வடகரை புதிய பஸ்நிலையம் அருகே ஜவுளி மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றனர். மறுநாள் காலை பார்த்த போது கடையின் வெளிப்பக்க ஷோ கேஸ் கண்ணாடி உடைக்கப்பட்டி ருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த கவிதபிரியா உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ஷட்டர் கதவு பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பைபிட் (Bybit) நிறுவனம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
    • திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) பைபிட் நிறுவனம், அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்களில் ஒன்றிலிருந்து Ethereum (ETH) திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, 401,346 ETH டோக்கன் (1.13 பில்லியன் டாலர் மதிப்பு) பைபிட்டின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டது.

    பரிமாற்றத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் விசாரித்து வருகிறோம். இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார்.  

    ×