search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் ஆமை"

    • கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.
    • ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கின்றன. அவை கடற்கரை பகுதிகளில் குஞ்சு பொரித்து வாழ்ந்து வருகின்றன.

    ஆமையை மீனவர்கள் உணவுக்காக பிடிக்கவோ, வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

    கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் முகத்தில் கண்கள் இல்லாமல், வாய் மற்றும் இறக்கை பகுதிகள் சேதம் அடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. கடற்கரையில் இறந்து ஒதுங்கி கிடந்த ஆமையை கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பார்த்தனர்.

    இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஆமையை அந்த பகுதியிலேயே உடற்கூறாய்வு செய்து புதைக்கவும் ஏற்பாடு செய்தனர். 

    • ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.
    • கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியா ளர்களும் கூறுகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். ஆமை முட்டை களை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்து அந்த முட்டைகள் எல்லாம் ஆமைக்குஞ்சுகளாக மாறியவுடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியா ளர்களும் கூறுகின்றனர். 

    இதன் காரணமாக தான் இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ஆமைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் முட்டையிட நேற்று இரவு சுமார் 50 கிலோ எடையுள்ள ஒரு கடல் ஆமை தீர்த்தவாரி கடற்கரை பகுதிக்கு வந்தது. இதனையடுத்து இந்த ஆமை குழி தோண்டி முட்டை இட சென்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக மர்மமான முறையில் அந்த ஆமை இறந்து கிடந்தது. கடல் ஆமை அருகில் முட்டையும் சிதறி கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆமையை மீட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆமை யாரேனும் அடித்து கொன்ற னரா? அல்லது படகு மோதி இறந்ததா? அல்லது நாய்கள் அதை கடித்து விட்டதா என்பது ஆமையை உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான் தெரியவரும் என்று சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் கூறுகி ன்றனர்.

    ×